Huawei நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டி.வி. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட் டி.வி. முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் என Huawei அறிவித்துள்ளது.
இந்த சாதனத்தில் 4K குவாண்டம் டாட் ஸ்கிரீன், மெல்லிய மெட்டல் பெசல்கள் மற்றும் பாப்-அப் கேமரா வழங்கப்பட்டுள்ளன.Huawei விஷன் டி.வி. 65 இன்ச் மற்றும் 75 இன்ச் QLED டிஸ்ப்ளே பேனல்கள் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 55 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல்களை அறிமுகம் செய்ய ஹூவாய் திட்டமிட்டுள்ளது.
இந்த டி.வி.யில் ஹாங்கு 818 சிப்செட், ஆக்டா-கோர் சி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் MEMC, ஸ்டான்டர்டு HDR, நாய்ஸ் ரிடக்ஷன் போன்ற அம்சங்களை வழங்குகிறது. பாப் அப் வடிவமைப்பில் கேமரா பயனற்ற நிலையில், வெளியில் வராத படி உருவாக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் விஷன் டி.வி. ரிமோட் சிறப்பு என்ன
ஹூவாய் விஷன் டி.வி.யில் 5.1 சரவுண்ட் சவுண்ட் எஃபெக்ட் வழங்கப்படுகிறது. இதில் 8+1+1 சவுண்ட் சிஸ்டம், மல்டி-ஸ்கிரீன் கொலாபரேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஹூவாய் விஷன் டி.வி.யில் பல்வேறு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய டி.வி.யில் ஏ.ஐ. மோட் வழங்கப்படுகிறது. இது திரையின் பிரகாசத்தை ஃபில்ட்டர் கொண்டு மாற்றியமைத்து பயனர்களின் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும். இத்துடன் ஒன்-ஹோப் ப்ரோஜெக்ஷன் எனும் அம்சத்தையும் ஹூவாய் அறிமுகம் செய்தது.