சவுண்ட் பார் உடன் 32 இன்ச் கொண்ட டிவி ஸ்மார்ட்போன் விலையில் டிவி அறிமுகம்.
டைவா எனும் நிறுவனம் இந்தியாவில் ரூ.12,000 பட்ஜெட்டில் பில்ட்-இன் சவுண்ட்பாருடன் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி.யை ஸ்மார்ட்போன் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
டைவா நிறுவனம் இந்தியாவில் புதிய 32 இன்ச் ஸ்மார்ட் LED. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.யில் பில்ட்-இன் சவுண்ட்பார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த டி.வி.யில் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பமும் பிரத்யேக கிரிக்கெட் பிக்சர் மோட் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த டிவி உலக கோப்பையை கண்டுகளிக்கும் விதமாக இதை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
மேலும் டைவாவின் புதிய ஸ்மார்ட் டி.வி. D32SBAR எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறத., இந்த டிவி ஒரு 32 இன்ச் யின் HD டிஸ்ப்ளே 1366×768 பிக்சல் ஹை ரெசல்யூஷன்மற்றும் 300 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டி.வி. வைடு கலர் கமுட் உடன் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது
இந்த ஸ்மார்ட் டி.வி. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53 குவாட்-கோர் பிராசஸர், 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் D32SBAR ஸ்மார்ட் டி.வி.யில் பிளே ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
இதுதவிர சரவுண்ட் சவுண்ட் மற்றும் அப்டேட் செய்யப்பட பிக்சர் குவாலிட்டி கொண்டிருக்கிறது. ஆடியோ தரத்தை சிறப்பாக வழங்கும் நோக்கில் புதிய ஸ்மார்ட் டி.வி.யில் பில்ட்-இன் சவுண்ட்பார் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டைவா D32SBAR டி.வி. விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விற்பனை டைவாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இத்துடன் இரண்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. இதில் ஒரு வருடத்திற்கான வாரண்டியை மை டைவா செயலியில் பதிவு செய்து இலவசமாக பெற முடியும்.
இத்துடன் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 2 USB போர்ட்கள், ஆப்டிக்கல் அவுட்புட், வைபை மற்றும் லேண் உள்ளிட்ட போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிரத்யேக கிரிக்கெட் பிக்ச்சர் மோட் வழங்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் போட்டிகளை சிறப்பான அனுபவத்தில் கண்டுகளிக்க முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile