Daiwa யின் இரண்டு ஸ்மார்ட்டிவி வெறும் ரூ,7,499 யில் இந்தியாவில் அறிமுகம், இதன் அம்சங்கள் பார்த்தா அசந்து போவிங்க

Daiwa யின் இரண்டு ஸ்மார்ட்டிவி வெறும் ரூ,7,499 யில் இந்தியாவில் அறிமுகம், இதன் அம்சங்கள் பார்த்தா அசந்து போவிங்க
HIGHLIGHTS

Daiwa இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்தது

Daiwa 32 inch Smart TV மற்றும் Daiwa 43 inch Smart TV ஆகும்.

இந்த ஸ்மார்ட்டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் கொண்ட பேசேல் லெஸ் மற்றும் ஸ்லிம்மாக வருகிறது

Daiwa இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்தது அவை Daiwa 32 inch Smart TV மற்றும் Daiwa 43 inch Smart TV ஆகும். இந்த ஸ்மார்ட்டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் கொண்ட பேசேல் லெஸ் மற்றும் ஸ்லிம்மாக வருகிறது. இதனுடன் இதில் குவாட் கோர் ப்ரோசெசர் மற்றும் பல சவுண்ட் மோட,ஐ கேர் (eye care) மோட், ஆப்பில் ஏர்ப்ளே சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது மேலும் இப்பொழுது இந்த இரு டிவியின் அம்சம் மற்றும் விலை தகவலை பார்க்கலாம்.

Daiwa Smart TV யின் விலை

Daiwa 32 inch HD Ready TV மாடல் எண் D32H1COC விலை ரூ.7,499 மற்றும் Daiwa 43 இன்ச் Full HD TV மாடல் நம்பர் D43F1COC விலை ரூ.13,999. இந்த ஸ்மார்ட் டிவிகள் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டிவிகளுக்கு நிறுவனம் 1 வருட வாரண்டியை வழங்குகிறது.

Daiwa 32 inch, 43 inch சிறப்பம்சம்.

Daiwa யின் இரண்டு டிவியும் எட்ஜ் டு எட்ஜ் டிசைன் உடன் இதன் கார்னர் மெல்லிய பெசெல்ஸ் டிசைன் கொண்டுள்ளது மேலும் Daiwa 32 inch மாடலில் 1366×768 பிக்சல் ரேசளுசன் உடன் HD ரெடி டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, அதுவே aiwa 43 inch மாடலில் 1920×1080 பிக்சல் ரேசளுசன் உடன் முழு HD டிஸ்ப்ளே உடன் வருகிறது, இந்த இரண்டு டிவியிலும் 60Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 16.7 மில்லயன் கலர் சப்போர்ட் செய்கிறது.

இதை தவிர ஐ கேர் மோட் மற்றும் 7 பிக்சர் மோட் வழங்குகிறது, 32 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் இரண்டு பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் வருகின்றன, அவை 20W ஆடியோ அவுட்புட் மற்றும் 5 சவுன்ட் மொட்களை சப்போர்ட் செய்கிறத.

Daiwa Smart TV 512MB ரேம் மற்றும் 4GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த இரண்டு டிவிகளும் குவாட் கோர் ப்ரோசெசரில் வேலை செய்கின்றன. இந்த ஸ்மார்ட் டிவிகள் Prime Video, Sony Liv, Zee5 மற்றும் YouTube உள்ளிட்ட பல OTT பிளாட்பாரம் சப்போர்ட் செய்கிறது . இந்த போனில் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பிற ஸ்மார்ட் போனிலிருந்து தடையற்ற ஸ்ட்ரீமிங்கிற்கான Miracast மற்றும் Apple AirPlay ஆதரவை இந்த டிவிகள் வழங்குகின்றன.

இந்த ஸ்மார்ட் டிவிகளில் உள்ள கனெக்டிவிட்டி விருப்பங்களில் Wi-Fi, AV, HDMI மற்றும் USB போர்ட்கள் அடங்கும். பெற்றோர் கட்டுப்பாடு போன்ற அம்சங்களும் குறிப்பாக குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கிடைக்கின்றன.

இதையும் படிங்க:YouTube யில் வருகிறது மஜாவான டப்பிங் அம்சம் இனி எந்த மொழியிலும் வீடியோ பார்க்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo