Blaupunkt 43-55 இன்ச் கொண்ட Google TV அம்சத்துடன் அறிமுகம்

Updated on 28-Sep-2023
HIGHLIGHTS

Blaupunkt நிறுவனம் இரண்டு புதிய டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

43 இன்ச் QLED மற்றும் இரண்டாவது 55 இன்ச் உடன் வருகிறது

இதனுடன், 60W ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Blaupunkt நிறுவனம் இரண்டு புதிய டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவது 43 இன்ச் QLED மற்றும் இரண்டாவது 55 இன்ச் 4K GTV. இவை ஹை பர்போமான்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஹோம் என்டர்டெயின்மென்ட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன், இன்டிக்ரேடட் சவுன்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், 60W ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில் விலை மற்றும் பல சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Blaupunkt TV விலை தகவல்.

இந்த புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட டிவியின் ஆரம்ப விலை 28,999 ஆகும், அதேசமயம், 55CSGT7023 வகையின் விலை ரூ.34,999. பண்டிகைக் காலத்தில் சிறப்பு அறிமுகச் சலுகைகளுடன் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதை Flipkart யிலிருந்து வாங்கலாம். இதனுடன், ICICI, Kotak, Axis பேங்க் கார்ட்கள் மூலம் பணம் செலுத்துவதில் இன்ஸ்டன்ட் தள்ளுபடியும் கிடைக்கும்.

#image_title

Blaupunkt 43-இன்ச் QLED TV சிறப்பம்சம்.

இந்த 43 இன்ச் QLED 4K டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் HDR10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது, இது நேர்த்தியான கருப்பு வடிவமைப்புடன் வருகிறது. இது டால்பி சான்றிதழ் பெற்ற ஆடியோவைக் கொண்டுள்ளது. இதில் புளூடூத் 5 மற்றும் டூயல் பேண்ட் வைஃபை வசதி உள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 1000 க்கும் மேற்பட்ட பயன்பாடுகளுக்கான சப்போர்டை கொண்டுள்ளது. உள்ளமைக்கப்பட்ட Chromecast மற்றும் AirPlay ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. இது DTS TruSurround சவுண்ட் 50 வாட் ஸ்பீக்கர் உட்பட பல சவுண்ட் மோட்களுடன் வருகிறது. இது கூகுள் டிவியை அடிப்படையாகக் கொண்டது.

#image_title

Blaupunkt 55-இன்ச் Google TV சிறப்பம்சம்.

Blaupunkt 55-இன்ச் கொண்ட இந்த டிவியில் Google TV அம்சங்களுடன் வருகிறது மேலும் இது 4K UHD LED bezel-less டிஸ்ப்ளே உடன் HDR10+ உடன் வருகிறது. மேலும் இதில் Google TV யின் 60W ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் DTS TruSurround டெக்னாலஜி மற்றும் டால்பி டிஜிட்டல் ப்ளஸ் உடன் வருகிறது.

மேலும் இதில் 2GB யின் ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் மற்றும் MediaTek MT9062 ப்ரோசெசர் உடன் இதில் Mali-G52 GPU. பேர் செய்யப்பட்டுள்ளது

இந்த டிவியில் கனெக்டிவிட்டிக்கு புளூடூத் 5.0, டூயல்-பேண்ட் Wi-Fi, மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள் மற்றும் DVB-C/DVB-T/T2 இணக்கத்தன்மை.புளூடூத் 5.0, டூயல்-பேண்ட் Wi-Fi, மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள் மற்றும் DVB-C/DVB-T/T2 இணக்கத்தன்மை. மேலும் இதில் Chromecast மற்றும் Airplay பில்ட் உடன் வருகிறது, மேலும் இந்த டிவியில் கூகுள் அசிஸ்டன்ட் பவர் ரிமோட் உடன் வருகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :