Acer W Series 4K OLEDடிவி 65 இன்ச் டிஸ்பிளே உடன் அறிமுகம்
இந்திய சந்தையில் W சீரிஸ் 4K OLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏசர் தனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வரம்பை விரிவுபடுத்தியுள்ளது
ஏசர் W சீரிஸ் 4K QLED டிவி 55 இன்ச் மாடல் ரூ. 69 ஆயிரத்து 999 என துவங்குகிறது.
இரண்டு புதிய டிவி மாடல்களின் விற்பனையும் ப்ளிப்கார்ட், அமேசான் உள்பட முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.
இந்திய சந்தையில் W சீரிஸ் 4K OLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏசர் தனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. லைன் டிவியின் இந்த டாப் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு திரை அளவுகளில் கிடைக்கிறது. சிறந்த பார்வை அனுபவத்திற்காக இந்த ஸ்மார்ட் டிவியில் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏசர் டபிள்யூ சீரிஸ் 4கே ஓஎல்இடி ஸ்மார்ட் டிவி பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஏசர் W சீரிஸ் 4K QLED டிவி 55 இன்ச் மாடல் ரூ. 69 ஆயிரத்து 999 என துவங்குகிறது. ஏசர் W சீரிஸ் 4K QLED டிவி 65 இன்ச் மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு புதிய டிவி மாடல்களின் விற்பனையும் ப்ளிப்கார்ட், அமேசான் உள்பட முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.
Acer W Series சிறப்பம்சம்.
ஏசர் W சீரிஸ் 4K அல்ட்ரா HD QLED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களில் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன அம்சங்கள் உள்ளது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 3840×2160 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளன.
புதிய ஏசர் டிவிக்களின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக சூப்பர் ஆண்டி-கிளேர் தொழில்நுட்பம் உள்ளது. இது அதிக வெளிச்சமுள்ள பகுதிகளிலும் காட்சிகளை தெளிவாக பார்க்க செய்கிறது. இத்துடன் குவாண்டம் பிக்சர் தொழில்நுட்பம், 4K HDR, HDR 10+ HLG, டால்பி விஷன், 100 சதவீத கலர் வால்யூம் கொண்ட QLED வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள QLED பேனல் கச்சிதமான மற்றும் பிரகாசமான நிறங்களை வெளிப்படுத்துகிறது. ஏசர் W சீரிஸ் மாடல்கள் அசத்தலான டிசைன், ஃபிரேம்லெஸ், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே மூலம் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபுல் மோஷன் மெல்லிய வால் மவுண்ட் வழங்கப்படுகிறது. இது மெல்லிய தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த டிவிக்களில் 30 வாட் ஆரல் சவுண்ட் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு டிவி 11, கூகுள் ஆப்ஸ், ஃபார் ஃபீல்டு மைக், மோஷன் சென்சார் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி கொண்ட ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர 64-பிட் குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியுடன் மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile