Acer யின் புதிய OLED மற்றும் QLED டிவி அறிமுகம், இதன் டாப் அம்சம் தெரிஞ்சிக்கோங்க.
Acer யின் புதிய ஸ்மார்ட்டிவி சீரிஸ் அறிமுகம்
ஏசர் QLED மற்றும் OLED ஸ்மார்ட் டிவிகளை மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது
விலையை பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்டிவியின் ஆரம்ப விலை 13,999 ரூபாயாக இருக்கிறது
Acer யின் புதிய ஸ்மார்ட்டிவி சீரிஸ் அறிமுகம், இந்த ஸ்மார்ட்டிவி சீரிஸ் கூகுள் ஆண்ட்ராய்டு டிவி அடிப்படையிலானது, ஏசர் QLED மற்றும் OLED ஸ்மார்ட் டிவிகளை மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் ஓ சீரிஸ் ஃபிளாக்ஷிப் டிவி தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது, இது 60W ஒலி வெளியீட்டுடன் வருகிறது. ஏசர் இரண்டு 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஓஎல்இடி ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை மற்றும் ஆபர்
விலையை பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்டிவியின் ஆரம்ப விலை 13,999 ரூபாயாக இருக்கிறது, அதுவே 75 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவியின் விலை 1.49 லட்ச ரூபாயாக இருக்கிறது, Acer யின் சீரிஸ் ஸ்மார்ட்டிவி விற்பனை ஜூன் 6 தேதி நடைபெறும் இது அனைத்து சேனல் பார்ட்னர்களிலும் ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்
சியாறப்பம்சம்.
இதனுடன் V சீரிஸின் கீழ் குறைந்த விலை QLED டிவி அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடன் நிறுவனம் 32 இன்ச் கொண்ட QLED டிவி அறிமுகம் செய்தது, இது 43 இன்ச், 50இன்ச் மற்றும் 55 இன்ச் ஸ்க்ரீன் வேரியண்ட்டில் வருகிறது. இந்த டிவிகள் MEMC, Dolby Atmos மற்றும் Vision மற்றும் UHD அப்ஸ்கேலிங் மற்றும் உயர்நிலை பிரைட்னஸ் ஆதரவுடன் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட் டிவியில் 16 ஜிபி உள் ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. இது தவிர, I சீரிஸ் 32 இன்ச் மற்றும் 40 இன்ச் ஸ்க்ரீன் அளவு கொண்ட ஸ்மார்ட் டிவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Acer I சீரிஸ் டிவி
30W சவுண்ட் வெளியீட்டுடன் வரும் இந்த I தொடரில் புதிய ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 36W ஒலி வெளியீடு உள்ளது. 40 வாட் ஸ்பீக்கர் 40 இன்ச் ஸ்கிரீன் அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. UHD மாடல் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் திரை அளவுகளில் வருகிறது. ஏசரின் புதிய கூகுள் டிவி வரம்பு HDMI 2.1 போர்ட் மற்றும் USB 3.0 உடன் டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் 2-வே புளூடூத் 5.0 மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் வருகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile