ரூ.4,999விலையில 32 இன்ச் கொண்ட LED ஸ்மார்ட் டிவி அறிமுகம்…!

Updated on 02-Feb-2019
HIGHLIGHTS

இந்தியாவின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி.யை டெல்லியை சேர்ந்த சமி இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சமி SM32-K5500 HD . LED . டி.வி. விலை இந்தியாவில் ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இந்தியாவின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி.யை டெல்லியை சேர்ந்த சமி இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சமி SM32-K5500 HD . LED . டி.வி. விலை இந்தியாவில் ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் டெலிவரி மற்றும் ஜி.எஸ்.டி. கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை.

இந்த டி.வி.யில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து பாகங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதால் சுமார் 200 பேருக்கு வேலை கிடைத்திருப்பதாக சமி இன்ஃபர்மேடிக்ஸ் தெரிவித்திருக்கிறது. மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை சமி 32 இன்ச் ஆண்ட்ராய்டு டி.வி.யில் 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருக்கிறது.

32-இன்ச் ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இதனால் இதில் அனைத்து ஸ்மார்ட் செயலிகளும் சீராக இயங்கும். இந்த எல்.இ.டி. டி.வி.யில் 32-இன்ச் 1366×786 பிக்சல் HD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் 10 வாட் ஸ்பீக்கர்கள், எஸ்.ஆர்.எஸ். டால்பி டிஜிட்டல் மற்றும் 5 பேண்ட் சவுண்ட் தரம் வழங்குகிறது.

சமி 32 இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் LED  டி.வி.யில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் அவரவர் விரும்பும் செயலிகளை கூகுள் பிளேயில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை ஆண்ட்ராய்டு டி.வி.யில் இரு ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. போர்ட்கள், ஒரு ஏ.வி. அவுட் போர்ட் மற்ரும் வீடியோ இன்புட் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று சமி SM32-K5500 HD LED . டி.வி. மாடலின் விலை ரூ.4,999 தான். எனினும் இந்த டி.வி.யை சமி ஆப் கொண்டு தான் வாங்க வேண்டும். சமி செயலியில் டி.வி.யை முன்பதிவு செய்யும் போது டி.வி.யை டெலிவரி செய்ய உங்களது இருப்பிட விவரங்களை கேட்கும். 

இந்தியா முழுக்க சமி ஸ்மார்ட் டி.வி.யை டெலிவரி செய்வதற்கான கட்டணம் ரூ.1,800 என்றும் இதனுடன் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி கூடுதலாக செலுத்த வேண்டும். அந்த வகையில் டி.வி.யை வாங்கும் போது மொத்த கட்டணம் ரூ.8,000 ஆகும்.

“இந்தியாவின்  வசிக்கும் நடுத்தர மற்றும் ஏழ்மை குடும்பங்களை சேர்ந்தவர்களும் ஸ்மார்ட் டி.வி. அனுபவத்தை பெறச் செய்யும் நோக்கில் ரூ.4,999 விலையில் வழங்க முடிவு செய்தோம்,” என சமி இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவன தலைவர் அவினாஷ் மேத்தா தெரிவித்தார்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :