ZTE, உலகில் முதல் முறையாக 5G கல் செய்து அசத்தியுள்ளது…1

Updated on 21-Jan-2019
HIGHLIGHTS

ZTE கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் சேர்ந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன.

ZTE கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் சேர்ந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்.டி.இ. உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது. ஷென்சென் 5ஜி சோதனை மையத்தில் உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி வீசாட் க்ரூப் கால், ஆன்லைன் வீடியோ மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. NSA  மோட் மூலம் கால் செய்யப்பட்ட வணிக ரீதியிலான முதல் சோதனை மையமாக சீனா யுனிகாம் நிறுவனத்தின் ஷென்சென் சோதனை மையம் இருக்கிறது.

சோதனைகளில் இசட்.டி.இ. 5ஜி என்ட்-டு-என்ட் தீர்வுகளான ரேடியோ அக்சஸ் நெட்வொர்க், கோர் நெட்வொர்க், டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் மற்றும் இன்டலிஜென்ட் டிவைஸ் உள்ளிட்டவை அடங்கும். இதுதவிர இந்த சோதனைகளில் 5ஜி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களும் சீராக இயங்கச் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனா யுனிகாம் நிறுவனம் 5ஜி சேவை வழங்க சோதனை செய்யும் முதல் இடமாக ஷென்செனை தேர்வு செய்தது. இந்த வட்டாரம் முழுக்க நெட்வொர்க் உபகரணங்களை கட்டமைப்பது, சிறப்பு சேவைகளை வழங்குவது, ரோமிங் மற்றும் இண்டர்கனெக்ஷன் உள்ளிட்டவற்றை பலகட்டங்களில் சீனா யுனிகாம் சோதனை செய்து வருகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :