வோடபோன் நிறுவனம் வரிசையாக புது புது ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வந்தது.இதனை தொடர்ந்து மற்ற டெலிகாம் நிறுவனங்களும் ப்ரீபெய்ட் சலுகையே அறிவித்து வருகிறது, அதாவது அதன் பழைய திட்டத்தை மாற்றி அமைப்பதென்று இது போலவே இருந்து வருகிறது. அந்த வகையில் புதிய போஸ்ட் பெயிட் திட்டத்தை பற்றி அறிவித்து வெகு நாட்களாகிவிட்டது.
அதை முறியடிக்கும் விதமாக வோடபோன் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வோடபோன் அறிவித்திருக்கும் புதிய புதிய போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு ரூ.11,498 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மாதம் ரூ.649 கட்டணத்தில் ரெட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பலன்களை பொருத்தவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் STD கால்கள் மற்றும் அன்லிமிட்டெட் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டேட்டா பலன்களை பொருத்தவரை திட்டத்தில் மாதம் 90 ஜி.பி. டேட்டா, மற்றும் 200 ஜி.பி. வரை டேட்டா ரோல்ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது.
இத்துடன் 12 மாதங்களுக்கான வோடபோன் பிளே சந்தாவும் இச்சலுகையில் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் நேரலை டி.வி. மற்றும் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். இத்துடன் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவும் வழங்கப்படுகிறது.
இத்துடன் பழைய ஐபோன்களை கொடுத்து புதிய ஐபோனினை வாங்கிக்கொள்ளும் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஐபோன் 5எஸ் மற்றும் அதற்கும் பழைய ஐபோன்களை கொடுத்து வாடிக்கையாளர்கள் புதிய ஐபோனினை பெற்றுக் கொள்ளலாம். இதில் பயனர்கள் தங்களது ஐபோனினை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம் வாங்கியிருப்பதோடு ஐபோன் 18 மாதங்களுக்குள் வாங்கியதாக இருக்க வேண்டும்.
இவைதவிர புதிய சலுகையை செலக்ட் செய்வோர் ஐபோன் ஃபார்எவர் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.649 மற்றும் அதற்கும் அதிக கட்டணம் கொண்ட போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது. இதில் ஐபோனை தவறுதலாக கீழே போடும் போது ஏற்படும் சேதத்தை சரி செய்து கொள்ளலாம்.
இச்சலுகையில் அதிகபட்சம் ரூ.15,000 வரையிலான தொகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் ஐபோன் ஃபார்எவர் சலுகையில் ஐபோனினை சரி செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ ரூ.2000 மற்றும் அதற்கான GST. வரியை செலுத்த வேண்டியிருக்கும்.