வோடபோன் அதிரடி ஆபர் ஜியோவுக்கு போட்டியாக வழங்கியுள்ளது…!
இந்த சலுகை முதற்கட்டமாக கர்நாடகா மற்றும் மும்பை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகை ஜியோவுக்கு போட்டியாக அறிவித்துள்ளது. புதிய ரூ.279 சலுகை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக அறிவித்துள்ளது .
இந்த புதிய வோடோபன் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவையை நீண்ட நாட்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக டேட்டாவும் வழங்கப்படுகிறது. வோடபோன் வழங்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையில் தினமும் 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
வோடபோனின் புதிய ரூ.279 சலுகை 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் SMS வழங்குகிறது. கூடுதலாக இந்த சலுகையில் 4 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்குகிறது.
மேலும் இந்த சலுகை முதற்கட்டமாக கர்நாடகா மற்றும் மும்பை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களில் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
வோடபோன் அறிவித்து இருக்கும் புதிய சலுகை வாய்ஸ் கால் அதிகம் பயன்படுத்துவோரை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வோடபோன் இரண்டு பிரீபெயிட் சலுகையை வாய்ஸ் காலிங் பலன்களுடன் அறிவித்தது. இவை ரூ.99 மற்றும் ரூ.109 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் அதிகபட்சம் 1 ஜி.பி. டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கின.
இந்திய டெலிகாம் சந்தையில் மற்ற நிறுவனங்கள் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை ரூ.300-க்கும் குறைவான விலையில் இதுவரை வழங்கவில்லை. ஜியோவின் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட துவக்க விலை சலுகையின் கட்டணம் ரூ.348 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile