வோடபோன் வழங்குகிறது ரூ.199-க்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா…!
28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 78.4 ஜிபி டேட்டா கிடைக்கும்.
வோடபோன் நிறுவன அதன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் பழைய சலுகையில் பயனர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால் இது செலக்ட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.199 சலுகையில் தினமும் அதிகபட்சம் 2.8 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 78.4 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. எனினும் SMS சலுகை கிடையாது
இதுகுறித்து டெலிகாம்டாக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வோடபோன் தனது ரூ.199 சலுகையை மேம்படுத்தி தற்சமயம் தினமும் 2,8 ஜிபி டேட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த சலுகை செலக்ட் செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
அன்லிமிட்டெட் கால்களின் படி பயனர்கள் தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும் பேச முடியும். புதிய மாற்றத்தின் படி வோடபோன் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணத்தை ரூ.2.54 விலையில் வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile