இப்பொழுது வோடபோன் வழங்குகிறது ரூபாய்.151க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்

இப்பொழுது வோடபோன்  வழங்குகிறது ரூபாய்.151க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்
HIGHLIGHTS

வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 1GB டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை வழங்கும் இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வோடபோன் சூப்பர் பிளான் பெயரில் ரூ.158க்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ரூபாய் 151க்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 28 நாட்களுக்கு 1 GB டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இரண்டு சலுகைகளும் கேரளாவில் மட்டும் வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை

புதிய ரூ.158 சலுகையானது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1.5 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.169 சலுகைக்கும் போட்டியாக அமைந்துள்ளது. 

ஏர்டெல் ரூ.169 சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை ஏர்டெல் இணைந்திருக்கும் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகை 14 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

வோடபோன் அறிவித்திருக்கும் ரூ.151 சலுகை ஏர்டெல் வழங்கி வரும் ரூ.93 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஐடியா செல்லுலார் ரூ.109 சலுகையில் இதேபோன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo