வோடபோன் Redx போஸ்ட்பெயிட் சலுகை விலையை உயர்த்தியுள்ளது.

Updated on 11-May-2020
HIGHLIGHTS

வோடபோன் போஸ்ட்பெயிட் சலுகைகளில் விலை உயர்ந்த ஒன்றாக வோடபோனின் ரெட் எக்ஸ் சலுகை இருக்கிறது

வோடபோன் நிறுவனம் தனது ரெட் எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகை விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி ரெட் எக்ஸ் சலுகை விலை மாதத்திற்கு ரூ. 1099 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இதே சலுகை ரூ. 999 விலையில் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ரெட் எக்ஸ் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

வோடபோன் ரெட் சலுகைகள் மாதத்திற்கு ரூ. 399 எனும் துவக்க விலையில் இருந்து வழங்கப்படுகிறது.தற்சமயம் வோடபோன் நிறுவனம் தனது ரெட் எக்ஸ் சலுகை விலையை மட்டும் உயர்த்தி இருக்கிறது. மற்ற சலுகைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

இத்துடன் ஒரு வருடத்திற்கான நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, தேர்வு செய்யப்பட்ட விமான நிலைய லாஞ்ச்கள், தேர்வு செய்யப்பட்ட நாடுகளுக்கு விசேஷ விலையில் ஐஎஸ்டி அழைப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் ரூ. 2999 மதிப்புள்ள ஐரோம் எனும் 7 நாட்கள் சலுகையை வருடத்திற்கு ஒருமுறை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வோடபோன் போஸ்ட்பெயிட் சலுகைகளில் விலை உயர்ந்த ஒன்றாக வோடபோனின் ரெட் எக்ஸ் சலுகை இருக்கிறது. இதில் அன்லிமிட்டெட் டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :