வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெயிட் சலுகைகளை ஒன்றிணைத்து வோடபோன் ரெட் பிராண்டிங்கில் வழங்கி வருகிறது. இதேபோன்று ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் சலுகைகள் மே 11 ஆம் தேதியில் இருந்து வோடபோன் ரெட் பெயரில் வழங்க துவங்கியுள்ளது.
இது துவங்கிய ஒரே நாளில், வோடபோன் நிறுவனம் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் போஸ்ட்பெயிட் சலுகைகளை பயன்படுத்த புதிய வணிக பயன்பாட்டு கொள்கையை அறிவித்துள்ளது. தற்சமயம் வோடபோன் ரெட்எக்ஸ் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது. இதன் விலை மாதம் ரூ. 1099 ஆகும்.
புதிய வணிக பயன்பாட்டு கொள்கையின் படி ரெட்எக்ஸ் சலுகை பயனர்களின் வழக்கமான பயன்பாட்டுக்காக அறிவிக்கப்பட்டது ஆகும். இதனை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோர் கண்டறியப்பட்டால், அவர்களது சலுகை மாற்றப்பட்டு விலை குறைந்த சலுகை ஆக்டிவேட் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
வோடபோன் ரெட்எக்ஸ் சலுகையில் அன்லிமிட்டெட் டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் ஒரு வருடத்திற்கான நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, தேர்வு செய்யப்பட்ட விமான நிலைய லாஞ்ச்கள், தேர்வு செய்யப்பட்ட நாடுகளுக்கு விசேஷ விலையில் ஐஎஸ்டி கால்கள் வழங்கப்படுகின்றன. மேலும் ரூ. 2999 மதிப்புள்ள ஐரோம் எனும் 7 நாட்கள் சலுகையை வருடத்திற்கு ஒருமுறை பயன்படுத்திக் கொள்ள முடியும்.