அதிரடி பல திட்டத்துடன் வோடாபோனின் REDX சிறப்பு சலுகை அறிவிப்பு.
வோடபோன் ஐடியா நிறுவனம் வோடபோன் ரெட் எக்ஸ் பெயரில் புதிய லிமிட்டெட் எடிஷன் போஸ்ட்பெயிட் சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. மாதம் ரூ. 999 கட்டணத்தில் கிடைக்கும் வோடபோன் REDX சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிகிதம் அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.
இதுதவிர ரூ. 20,000 மதிப்புள்ள பலன்களும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. இதில் சர்வதேச ரோமிங், பிரீமியம் வாடிக்கையாளர் சேவை, விமான நிலையங்களின் ஓய்வறைக்கான அனுமதி, ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிரத்யேக சலுகைகள் உள்ளிட்டவை அடங்கும்.
வோடபோன் ரெட் எக்ஸ் சலுகையின் பொது பலன்களை பொருத்தவரை அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், சர்வதேச அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., மாதம் 150 ஜி.பி. டேட்டா எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.
இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது. இந்த சலுகை வழக்கமான வோடபோன் ரெட் சலுகைகளுடன் கிடைக்கிறது. வோடபோன் ரெட் எக்ஸ் சலுகையில் ஒரு வருடத்திற்கான நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5 மற்றும் வோடபோன் பிளே போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
புதிய வோடபோன் ரெட் எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் வோடபோன் இந்தியா வலைத்தளம் மற்றும் மை வோடபோன் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுதவிர ரூ. 2,999 மதிப்புள்ள ஐ-ரோம் சலுகையை பெற முடியும். இந்தியா மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் உள்ள ஓய்வறைகளை பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் இந்த சலுகையுடன் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்கள் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்யும் போது 10 சதவிகிதம் தள்ளுபடி பெற முடியும்.
மேலும் வோடபோன் ரெட் எக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மட்டும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அதிகபட்சம் இரண்டு முறை ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile