வோடபோன் ரெட் புதிய போஸ்ட் பெயிட் சலுகை அதிரடி அறிவிப்பு

Updated on 07-Jun-2019

புதிய சலுகையுடன் பயனர்களுக்கு அமேசான் பிரைம், வோடபோன் பிளே, மொபைல் ஷீல்டு, ஒற்றை பில் மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகிறது. புதிய வோடபோன் ரெட் டுகெதர் சேவையை செலக்ட் செய்வோர் ஐந்து இணைப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் ஒரு இணைப்புக்கான கட்டணம் ரூ.200 மட்டும் தான். 

வோடபோன் ரெட் டுகெதர் பலன்கள் என்ன 

– ஒரு இணைப்புக்கு 30 ஜி.பி. டேட்டா, அதிகபட்சம் 50 ஜி.பி. டேட்டாவினை ரோல்-ஓவர் செய்து கொள்ளும் வசதியும், குடும்ப தலைவருக்கு 80 ஜி.பி. டேட்டாவும், அதிகபட்சம் 200 ஜி.பி. ரோல்-ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது.

– ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

– இலவச மொபைல் ஷீல்டு: குடும்ப உறுப்பினருக்கு ஸ்மார்ட்போன் பாதுகாப்பு சேவை வழங்கப்படுகிறது. இதில் பயனர்களின் ஸ்மார்ட்போனிற்கு ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்து வழங்கப்படுகின்றன.

– வோடபோன் பிளே சந்தா அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் சன் நெக்ஸ்ட், ஆல்ட் பாலாஜி, ஜீ5, சோனி லைவ், ஷீமாரு, ஹோய் சோய் உள்ளிட்ட சேவைகளில் தரவுகளை கண்டுகளிக்க முடியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :