வோடபோன் அதன் ஆபரில் சில மாற்றம் செய்துள்ளது

Updated on 26-Feb-2018
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் தனது ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளில் மாற்றம் செய்திருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் நிறுவனமும் தனது சலுகைகளை மாற்றியமைத்திருக்கிறது. ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

மாற்றம் செய்ததும் முன்பை விட 50% கூடுதல் 3ஜி/4ஜி டேட்டா, 500 ஜிபி வரை ரோல்ஓவர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

வோடபோன் ரெட் ரூ.399 சலுகையில் மாதம் முழுக்க 200 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, 200 ஜிபி வரை ரோல்ஓவர் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஒரு ஆண்டு முழுக்க வோடபோன் பிளே சந்தா வழங்கப்படுகிறது. இதை கொண்டு லைவ் டி.வி. எந்நேரமும் பார்க்க முடியும். முன்னதாக ஹோம் நெட்வொர்க்கில் மட்டும் இலவச அழைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இம்முறை அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது. 

ரெட் டிராவலர் சலுகைகளில் மூன்று விதமாக வழங்கப்படுகின்றன – அனைத்திலும் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஒரு ஆண்டு வோடபோன் பிளே சந்தா மற்றும் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. 

இதன் ரூ.499 சலுகையில் 40 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, முன்னதாக இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. ரூ.699 சலுகையில் முன்னதாக 40 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், இம்முறை 50 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.999 சலுகையில் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, முன்னதாத இந்த சலுகையில் 60 ஜிபி டேட்டா மட்டமே வழங்கப்பட்டது. இந்த சலுகையில் இரண்டு மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவும் வழங்கப்படுகிறது.

அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, 200 நிமிடங்களுக்கு இலவச சர்வதேச நிமிடங்கள் வழங்கப்படுகிறது. ரூ.1299 சலுகையில் 100 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 75 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. 

ரூ.1699 சலுகையில் முன்பு வழங்கப்பட்டதை விட 50 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் இம்முறை வாடிக்கையாளர்கள் 150 ஜிபி டேட்டா பெற முடியும். இரண்டு சலுகைகளிலும் இரண்டு மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, 100 நிமிடங்களுக்கு இலவச சர்வதேச நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

மூன்றாவது சலுகையான ரூ.1,999-இல் வாடிக்கையாளர்களுக்கு 200 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 125 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இத்துடன் 500 ஜிபி டேட்டா ரோல் ஓவர், மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, 200 நிமிடங்களுக்கு இலவச சர்வதேச நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

வோடபோனில் விலை உயர்ந்த சலுகையான ரெட் சிக்னேச்சர் ரூ.2,999க்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஒரு ஆண்டுகளுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, 200 நிமிடங்களுக்கு இலவச சர்வதேச நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 500 ஜிபி டேட்டா ரோல்ஓவர் சசுகையும் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :