நாங்க எவ்வளவு தான் பொறுமையா இருக்கிறது… 75 ஜிபி டேட்டா வழங்கி அசத்திய வோடபோன் ரெட்

நாங்க எவ்வளவு தான் பொறுமையா இருக்கிறது… 75 ஜிபி டேட்டா வழங்கி அசத்திய வோடபோன் ரெட்
HIGHLIGHTS

வோடபோன் ரெட் டிராவலர் ரூ.499 திட்டம் தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் பிளஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வந்ததிற்கு பிறகு அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கு பயங்கர மோதல் என்றே கூறலாம் அனைத்து டெலிகாம் நிறுவங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள புது  புது  ஆபர்  அறிவித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இங்கு நாம் ஏற்கனவே பார்த்து இருப்போம், ரிலையன் ஜியோ  ஆபர், ஏர்டெல்,,ஐடியா BSNL  என பல  ஆபர்  பார்த்தோம். அந்த வகையில் இப்பொழுது ஐடியா வோடபோன் ரெட்  என்று புது  ஆபர் அறிவித்துள்ளது 

வோடபோன் ரெட் பேசிக் 399 சலுகை தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட சலுகையில் பயனர்களுக்கு 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, முன்னதாக இந்த திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சலுகையில் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சபஸ்க்ரிப்ஷன் ஆகியவை வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் இன்டர்நெஷனல் கால்கள் , ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

வோடபோன் ரெட் டிராவலர் ரூ.499 திட்டம் தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் பிளஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில் தற்சமயம் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 40 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேட்டாவுடன் அன்லிமிட்டெட் லோக்கல் , STD கால்கள் , அன்லிமிட்டெட் ரோமிங் மற்றும் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சாப்ஸ்க்ரிபிஷன் , ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.300 மதிப்புள்ள டிவைஸ் ப்ரோடெக்ஷன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 போஸ்ட்பெயிட் சலுகையில் மாதம் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் கால்கள் , அன்லிமிட்டெட் எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மாதம் நிர்ணயிக்கப்பட்ட 25 ஜிபி டேட்டா நிறைவுற்றதும், ஒரு ஜிபி டேட்டா ரூ.20 கட்டணத்தில் தொடர்ந்து அதிவேக டேட்டா பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 மற்றும் ரூ.499 போஸ்ட்பெயிட் சலுகைகளும் மாற்றியமைக்கப்பட்டன. இவற்றில் அன்லிமிட்டெட் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங் வழங்கப்படுகிறது. ரூ.399 சலுகையில் 20 ஜிபி டேட்டா, ரூ.499-க்கு 40 ஜிபி டேட்டா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo