வோடபோன் பயனர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒரு வருட முழுவதும் தினமும் 1.5GB டேட்டா வழங்கி அசத்துகிறது

வோடபோன் பயனர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒரு வருட முழுவதும்  தினமும் 1.5GB  டேட்டா வழங்கி  அசத்துகிறது
HIGHLIGHTS

இச்சலுகை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பூனே, ஆமதாபாத், செக்கந்தராபாத், பரோடா, ஜெய்பூர், டெல்லி, நொய்டா, குர்கிராம், மும்பை மற்றும் சண்டிகர் என தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

ஐடியா செல்லுலார் நிறுவனம் சிட்டிபேங்க் உடன் சேர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுக்க டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கியது. தற்சமயம் இந்த சலுகை வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

வோடபோன் சிட்டிபேங்க் சலுகை ஏற்கனவே ஐடியா செல்லுலார் பயனர்களுக்கு வழங்கப்பட்டதை போன்ற பலன்களை வழங்குகிறது. அதன்படி பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

புதிய சலுகையை பெற பயனர்கள் ஏற்கனவே வோடபோன் பிரீபெயிட் சேவையை பயன்படுத்த வேண்டும். பின் வோடபோனின் சலுகைகள் இடம்பெற்றிருக்கும் வெப்சைட்டில் சென்று புதிதாக கிரெடிட் கார்டு ஒன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கிரெடிட் கார்டு வாங்கியதும், குறைந்தபட்சம் ரூ.4000 பயன்படுத்தினால் இந்த சலுகையை பெறலாம்.

இந்த சலுகை ஜூலை 31, 2019 வரை வழங்கப்படுகிறது. இச்சலுகை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பூனே, ஆமதாபாத், செக்கந்தராபாத், பரோடா, ஜெய்பூர், டெல்லி, நொய்டா, குர்கிராம், மும்பை மற்றும் சண்டிகர் என தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று கிரெடிட் வாங்கிய முதல் 30 நாட்களுக்குள் ரூ.4000 தொகைக்கு பயன்படுத்த வேண்டும். இந்த தொகையை ஒரே சமயமும் பயன்படுத்தலாம், சிறிது சிறிதாகவும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo