வோடபோன் இந்தியா பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.349 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ.348 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய சலுகையில் ரூ.1 மட்டும் கூடுதலாக வசூலித்து 0.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் சலுகைகளை வழங்குகின்றன. இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்கு பின் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் விலை குறைப்பு, கூடுதல் சலுகை என பல்வேறு அறிவிப்புகளை முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
வோடபோன் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச ரோமிங் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஜியோ வழங்கும் ரூ.299 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 84 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை இந்த சலுகையில் வழங்கப்படுகின்றன.
ஜியோ சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இதே சலுகையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.349 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா பெற முடியும். இதே சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் கிடைக்கின்றன. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும் இந்த சலுகையும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.