வோடபோன் வழங்குகிறது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 100% கேஷ்பேக்..!
வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் செலக்ட் செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் செலக்ட் செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றை அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்யும் போது கூப்பன்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதேபோன்ற சலுகையை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் ஏற்கனவே அறிவித்து, வழங்கி வருகின்றன. வோடபோன் 100 சதவிகித கேஷ்பேக் சலுகை ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் ஒன்றை ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள கேஷ்பேக் கூப்பன்கள் வழங்கப்படும்.
வோடபோன் வழங்கும் கேஷ்பேக் கூப்பன்களை மை வோடபோன் ஆப் மூலம் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போன்ற சலுகையை முன்னதாக ஏர்டெல் அறிவித்தது. இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோ இந்த சலுகையை நீண்ட காலமாக வழங்கி வருகிறது.
மை வோடபோன் ஆப் யின் படி 100 சதவிகித கேஷ்பேக் சலுகை ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. ரூ.399 ரீசார்ஜ் செய்வோருக்கு எட்டு கூப்பன்களும், ரூ.458 ரீசார்ஜ் செய்வோருக்கு ஒன்பது கூப்பன்கலும், ரூ.509 ரீசார்ஜ் செய்வோருக்கு 10 கூப்பன்கள் வழங்கப்படுகிறது.
வோடபோன் ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 SMS உள்ளிட்டவை முறையே 70 நாட்கள், 80 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
சில வட்டாரங்களில் ரூ.199 ரீசார்ஜ் செய்வோருக்கும் 100 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இத்துடன் பீகார், ஜார்கண்ட் பகுதிகளில் உள்ள வோடபோன் பயனர்கள் ரூ.409 (மற்ற வட்டாரங்களில் ரூ.399) சலுகையை பயன்படுத்த முடியாது. இதே போன்று இமாச்சல பிரதேச பயனர்கள் ரூ.458 சலுகைக்கு மட்டும் 100 சதவிகித கேஷ்பேக் பெற முடியும்.
பீகார் மற்றும் ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் போன்ற வட்டாரங்களில் ரூ.399 சலுகை ரூ.409 விலையிலும், ரூ.458 சலுகை ரூ.459 விலையிலும் ரூ.509 சலுகை ரூ.529 விலையில் வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile