வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலைகைய அறிவித்துள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இச்சலுகையில் டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
வோடபோன் புதிய ரூ.229 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங் மற்றும் தினமும் 100SMS உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் பிளே செயலி மூலம் நேரலை டி.வி., மூவீ மற்றும் நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
புதிய சலுகையின் விலை ரூ.229 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வோடபோன் நிறுவனம் ரூ.139 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. ரூ.139 சலுகையில் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. முன்னதாக 4ஜி சிம் கார்டுகளை பயனர்கள் வீட்டிற்கே இலவசமாக விநியோகம் செய்யும் திட்டத்தை வோடபோன் அறிவித்தது.
ரூ.229 பிரீபெயிட் சலுகை வோடபோன் நிறுவன வெப்சைட்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இச்சலுகை நாட்டின் முக்கிய வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏற்கனவே வழங்கப்படும் ரூ.199 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1.5 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவையும் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.