வோடபோன் 100% கேஷ்பேக் உடன் புதிய திட்டம் கொண்டுவந்துள்ளது

Updated on 01-Sep-2022
HIGHLIGHTS

ஜியோவை தொடர்ந்து பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக புதிய புதிய ஆபர் கொண்டு வருகிறது, அந்த வகையில் வோடபோன் தனது பயனர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது,

ஜியோவை தொடர்ந்து பல நிறுவனங்கள்  தொடர்ச்சியாக புதிய  புதிய  ஆபர்  கொண்டு வருகிறது, அந்த வகையில் வோடபோன்  தனது பயனர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக்  வழங்குகிறது, இதே போன்ற ஆபர் கேஷ்பேக்  ஆபர்  கடந்த வருடம்  நவம்பர் லிருந்து டிசம்பர்  2018 வரை  இதே போன்ற 100 % கேஷ்பேக்  வழங்கியது 

இந்நிலையில், 100 சதவிகித கேஷ்பேக் சலுகையை மீண்டும் வழங்குவதாக வோடபோன் அறிவித்துள்ளது. 100 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை தேர்வு செய்யப்பட்ட அன்லிமிட்டெட் சலுகைகளுக்கு வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது.

இதனை ஆக்டிவேட் செய்ய மை வோடபோன் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். முன்னதாக 100 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை மூன்று அன்லிமிட்டெட் சலுகைகளுக்கு வழங்கப்பட்டது. இம்முறை கூடுதலாக ஒரு சலுகைக்கும் சேர்த்து மொத்தம் நான்கு அன்லிமிட்டெட் சலுகைகளுக்கு வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.199, ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகையை வோடபோன் ரூ.50 மதிப்புள்ள வவுச்சர்களின் வடிவில் வழங்குகிறது. இதனால் ரூ.199 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள நான்கு வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதேபோன்று ரூ.509 செலுத்தும் போது ரூ.50 மதிப்புள்ள பத்து வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. இதன்பின் மேற்கொள்ளும் ரீசார்ஜ்களில் 25 சதவிகிதம் தள்ளுபடி பெற முடியும். 

ரூ.399 சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி, 1 ஜி.பி. டேட்டாவும், ரூ.458 சலுகையில் 1.5 ஜி.பி. டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.504 சலுகையில் 1.5 ஜி.பி. டேட்டா, 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. டேட்டா அளவு தீர்ந்ததும், கூடுதல் டேட்டாவிற்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

கேஷ்பேக் வழங்கப்படும் அன்லிமிட்டெட் சலுகைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. ரூ.199 சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி, 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :