வோடபோன் வழங்கும் இந்த புதிய சலுகையில் 12ஜிபி டேட்டா வழங்குகிறது, என்ஜோய் மக்களே

வோடபோன்  வழங்கும்  இந்த புதிய சலுகையில் 12ஜிபி டேட்டா வழங்குகிறது, என்ஜோய்  மக்களே
HIGHLIGHTS

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.999 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும்

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.999 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS  உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இருப்பினும்  இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இதே போன்று நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட மற்ற சலுகைகளில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படும் நிலையில், வோடபோன் புதிய சலுகையில் மொத்தமே 12 ஜி.பி. டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வோடபோன் சலுகை ஏர்டெல் வழங்கி வரும் ரூ.998 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. இத்துடன் புதிய வோடபோன் சலுகை முதற்கட்டமாக பஞ்சாப் வட்டாரத்தில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

அதிகளவு டேட்டா விரும்புவோர் வோடபோன் வழங்கும் ரூ.1,699 சலுகையை தேர்வு செய்யலாம். ரூ.1,699 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 SMS  உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.998 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 12 ஜி.பி. டேட்டா, ஏர்டெல் டி.வி. சந்தா உள்ளிட்டவை 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo