வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.597 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகை 168 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ரூ.597 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வோடபோன் சலுகையில், ஏர்டெல் வழங்கும் அதே சலுகைகள் வழங்கப்படுகிறது.
எனினும் வோடபோன் சலுகையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வோடபோனின் புதிய சலுகை ஸ்மார்ட்போன் பயனர்கள் மற்றும் ஃபீச்சர் போன் பயனர்களுக்கு தனித்தனி வேலிடிட்டி வழங்குகிறது. இதேபோன்ற டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்கும் சலுகையை ஜியோ இதுவரை வழங்கவில்லை.
வோடபோனின் புதிய ரூ.597 சலுகையில் பயனர்களுக்கு 10 ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 SMS ., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இந்தியா முழுக்க ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு 112 நாட்கள் வேலி்டிட்டியும், ஃபீச்சர்போன் பயனர்களுக்கு 168 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
இத்துடன் அன்லிமிட்டெட் அழைப்புகளில் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களும், வேலிடிட்டி முழுக்க வாய்ஸ் கால் அளவு 100 நம்பர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய சலுகை இந்தியா முழுக்க அனைத்து 4ஜி வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் புதிய சலுகையை ஆப் மற்றும் வெப்சைட் உள்ளிட்டவற்றிலும் பெற முடியும்.
ஏர்டெல் சார்பில் 168 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையில் 10 ஜிபி டேட்டா, தினமும் 100 SMS ., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் இந்த சலுகைக்கான கட்டணம் ரூ.597 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் ஃபீச்சர்போன் பயனர்களுக்கான வேலிடிட்டி குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஏர்டெல் ரூ.597 சலுகை செலக்ட் செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.