இப்பொழுது வோடபோன் 1 வருட வேலிடிட்டி உடன் புத்தம் புதிய சலுகையை கொண்டு வந்துள்ளது
ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் புதிய சலுகை ஒரு வருட வேலிடிட்டி வழங்குகின்றன.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1,699 சலுகைக்கு போட்டியாக வோடபோன் ரூ.1,999 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் புதிய சலுகை ஒரு வருட வேலிடிட்டி வழங்குகின்றன.
முதற்கட்டமாக வோடபோன் சலுகை கேரளாவில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சலுகை மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இதே பலன்களை ரூ.1,699 சலுகையில் வழங்குகிறது.
ரூ.1699 சலுகையை போன்று புதிய சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனினும், புதிய ரூ.1,999 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முந்தைய ரூ.1699 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வோடபோன் நிறுவனம் ரூ.119 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே வோடபோன் ரூ.169 விலையில் இதேபோன்ற சலுகைகளுடன் வோடபோன் பிளே ஆப் பயன்படுத்தும் வசதியும் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile