ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் தங்களது சலுகைகளின் விலையை 40 சதவீதம் வரை அதிகரித்தன. அதன் தொடர்ச்சியாக வோடபோன் ரூ. 997 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
புதிய ரூ. 997 விலை வோடபோன் சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும். இத்துடன் ரூ. 499 மதிப்புள்ள வோடபோன் பிளே சந்தா, ரூ. 999 மதிப்புள்ள சீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
வோடபோனின் ரூ. 997 விலை சலுகை தற்சமயம் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படவில்லை. விரைவில் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதே போன்ற பலன்களை வழங்கும் சலுகை ரூ. 599 விலையில் ஏற்கனவே வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
வோடபோன் வரிசையில் மற்ற நிறுவனங்களும் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகைகளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சலுகைகளும் ரூ. 598 மற்றும் ரூ. 599 விலையில் வழங்கப்படுகின்றன. எனினும், இவை 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கவில்லை.