வோடபோன் இந்தியா நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. ரூ.139 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது.
இதே விலையில் வோடபோன் பல்வேறு இதர சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதேபோன்று 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகள் ரூ.129 மற்றும் ரூ.169 விலையில் வழங்கப்படுகிறது.
புதிய ரூ.139 விலை சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள், தேசிய ரோமிங்கின் போது அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் கூடுதல் டேட்டாவினை எம்.பி. ஒன்றுக்கு 50 பைசா கட்டணத்தில் பயன்படுத்தலாம்.
டேட்டா தீர்ந்ததும் அதிவேக டவுன்லோடுகளுக்கு கூடுதல் டேட்டாவினை கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம். இந்த சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படும் நிலையில், இது தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
வோடபோன் ரூ.129 சலுகையில் 2 ஜி.பி. டேட்டாவும் ரூ.169 சலுகையில் 1 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. சமீபத்தில் வோடபோன் ரூ.16 விலையில் பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இச்சலுகையில் பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா 24 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. ரூ.16 வோடபோன் சலுகையில் எவ்வித வாய்ஸ் கால் மற்றும் SMS வழங்கப்படவில்லை.