வோடோபோன் ஜியோ உடன் மோதும் விதமாக இரண்டு புதிய அதிரடி ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தயுள்ளது, இந்த இரண்டு திட்டங்கள் Rs 569 மற்றும் Rs 511 விலையில் இருக்கிறது, அதில் தினமும் 3GB மற்றும் 2GB டேட்டா கிடைக்கிறது, இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும், இந்தத் திட்டங்களின் மூலம் நிறுவனம் ரூ. 2.25 க்கு குறைந்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நீண்ட காலமாக இருப்பதை போலவே இருக்கிறது. ஆனால் இப்பொழுது இந்த திட்டம் ஒரு சில வட்டாரங்களில் மட்டுமே இருக்கிறது. இது விரைவில் அனைத்து வட்டாரங்களிலும் வரும் எனக் கூறப்படுகிறது
Rs 569 இந்த புதிய திட்டம்
Rs 569 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டம் 3 ஜிபி 3G / 4G டேட்டா மிக அதிக வேகத்தை பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி நாள் 84 நாட்கள் ஆகும். இந்தத் திட்டத்தில் அன்லிமிட்டட் வொய்ஸ் கால்களும் SMS சேவைகளும் அடங்கும். பயனர்கள் 250 கால்கள் தினசரி வொய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 1000 நிமிட வொய்ஸ் கால் பேசலாம் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS அனுப்ப முடியும்.
Rs 511 யின் புதிய திட்டம்
Rs 511 புதிய திட்டத்தில் தினமும் 2GB 4G/3G டேட்டா கிடைக்கிறது,இதை தவிர இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் மற்றும் 100 SMS வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 168GB டேட்டா கிடைக்கும்
Rs 500க்குள் வரும் Vodafone திட்டங்கள்
வோடோபோனில் வரும் இரண்டு திட்டங்கள் Rs 569 மற்றும் Rs 511 விலையில சுமார் நிறைய பெனிபிட் வழங்கப்படுகிறது, இதில் நாம் Rs 549 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால்,இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5GB டேட்டா கிடைக்கிறது, ஆனால் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும். அதுவே நாம் Rs 509 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இதில் தினமும் 1.4GB டேட்டா கிடைக்கிறது இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது.
துரதிருஷ்டவசமாக, வோடபோன் ரூ 569 மற்றும் 511 ப்ரீபெய்ட் திட்டங்களை சில வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது ஆனால் தற்போது, எந்த இந்திய டெலிகாம் நிறுவனம் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா தரவில்லை.