வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.119 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
புதிய வோடபோன் சலுகை ரூ.169 சலுகையை போன்ற பலன்களை வழங்குகிறது. இச்சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் பிளே ஆப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
எனினும், புதிய ரூ.119 சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வாட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. ரூ.169 சலுகை இந்தியாவின் பெரும்பாலான வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. ரூ.119 சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் மட்டும் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் SMS சேவையை இலவசமாக பயன்படுத்த முடியாது. ரூ.169 சலுகையில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது.
வோடபோன் சலுகையை போன்றே ஐடியா செல்லுலார் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் ரூ.119 விலையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சலுகை ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட வாட்டாரங்களில் வழங்கப்படுவதாக தெரிகிறது.
ஏர்டெல் நிறுவனமும் ரூ.169 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் வோடபோன் வழங்குவதை போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. எனினும், ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
முன்னதாக வோடபோன் நிறுவனம் ரூ.169 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.169 சலுகை வோடபோன் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.