வோடபோன் நிறுவன புதிய பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.FRC முதல் ரீசார்ஜ் சலுகையின் கட்டணம் ரூ.351 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இச்சலுகையில் பயனர்களுக்கு வாய்ஸ் கால் மற்றும்SMS வழங்கப்படுகிறது. । நிறுவனம்முதல் ரிச்சார்ஜ் லிஸ்டில் ஏற்கனவே Rs 176, Rs 229, Rs 496 மற்றும் Rs 555 யில் வரும் திட்டத்தை வைத்துள்ளது. வோடபோன் பிரீபெயிட் சேவையில் இணையும் புதிய பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் முறை ரீசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு எவ்வித டேட்டா பலன்களும் வழங்கப்படவில்லை. இச்சலுகையில் ரிலையன்ஸ் ஜியோ போன்று எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
வோடபோன் ரூ.351 பிளான் :
வோடபோனின் புதிய ரூ.351 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இச்சலுகையில் எவ்வித டேட்டா பலன்களும் வழங்கப்படவில்லை என்பதால், டேட்டா பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தனியே டேட்டா சலுகையை செலக்ட் செய்ய வேண்டும்.
புதிய சலுகை பற்றிய விவரங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி இருக்கும் நிலையில், இச்சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப மாறுபடும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய சலுகையில் வோடபோன் பிளே சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சலுகை பயனர்களுக்கு டிசம்பர் 2018 முதல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Rs 176 வோடபோன் முதல் ரிச்சார்ஜ்
புதிய சலுகையில் டேட்டா பலன்கள் சேர்க்கப்படாத நிலையில், மற்ற முதல் முறை ரீசார்ஜ்களில் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. ரூ.176 சலுகையில் பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
Rs 229 வோடபோன் முதல் ரிச்சார்ஜ்
வோடாபோனின் ரூ.229 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றுடன் ரூ.496 மற்றும் ரூ.555 விலையிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டாவும், 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றின் வேலிடிட்டி முறையே 84 மற்றும் 90 நாட்கள் ஆகும்.
Rs 496 வோடபோன் முதல் ரிச்சார்ஜ்
பயனர் நீண்ட நாட்கள் வேலிட்டியுடன் புதிய திட்டத்தை ஏக்டிவ் செய்ய விரும்பினால், Rs 496 அன்லிமிட்டட் வோடபோன் 1 st ரிச்சார்ஜில் ஏக்டிவ் செய்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்களாக இருக்கிறது இந்த திட்டத்தில் பயனர்களுக்கு லோக்கல் STDகால்களின் நன்மையும் கிடைக்கிறது மற்றும் தினமும் பயனர்களுக்கு 1.4GB 4G டேட்டா பயன்படுத்தலாம் மற்றும் இதில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது
Rs 555 வோடபோன் முதல் ரிச்சார்ஜ்
வோடாபோனின் முதல் ரிச்சார்ஜ் திட்டத்தில் Rs 555 டாப் ரிச்சார்ஜாக இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் லோக்கல், STD , ரோமிங்கை போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களாக இருக்கிறது. மற்றும் தினமும் பயனர்களுக்கு 1.4GB 4G டேட்டா பயன்படுத்தலாம் மற்றும் இதில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது