Vodafone Idea (Vi) Vi One சேவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இந்தச் சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் பல சேவைகளை ஒரே கட்டணம் மற்றும் ஒரு பில்லில் செய்யலாம், இருப்பினும், தற்போது இந்த சேவையுடன் நான்கு ரீசார்ஜ் திட்டங்கள் மட்டுமே உள்ளன. இந்த பட்டியலில் மிகவும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி பேசினால், இதன் விலை ரூ.2192. இருப்பினும், பட்டியலில் உள்ள மிகவும் விலையுயர்ந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.12149 விலையில் கிடைக்கிறது.
நாம் இன்று Vi One plan திட்டத்தை பற்றி பேசினால் இது மிக குறைந்த விலை திட்டம் இது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2192 விலையில் கிடைக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் ஃபைபர் பிராட்பேண்ட், ப்ரீபெய்ட் மொபைல் மற்றும் OTT நன்மைகளுடன் வருகிறது. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வேறு என்னென்ன நன்மைகள் வழங்கப்படுகின்றன என்று பார்ப்போம்.
வோடபோன் ஐடியாவின் (Vi) இந்த ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி பேசினால் முதலில் நீங்கள் அதை ரூ. 2192 க்கு பெறலாம்.இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது, இது தவிர தினமும் 2ஜிபி டேட்டாவின் நன்மையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது, இது தவிர, திட்டத்தில் தினமும் 100 SMS கிடைக்கும். இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் கிடைக்கும் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை வாடிக்கையாளர்களுக்கு யூ பிராட்பேண்ட் மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிகயலர்களுக்கு 40Mbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, Disney+ Hotstar, SonyLIV, Vi Movies மற்றும் TV போன்ற OTT நன்மைகளைத் தவிர, இந்தத் திட்டம் Zee5 பிரீமியத்திற்கான அணுகலையும் வழங்குகிறது. இந்த சேவைகள் அனைத்தும் 90 நாட்களுக்கு உங்களுக்கு வழங்கப்படும்.
இதையும் படிங்க: Honor Magic 6 சேட்லைட் கம்யூனிகேசன் சப்போர்ட் கொண்டிருக்கும்
Vi யின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் மற்றும் பிங்கே ஆல் நைட் டேட்டாவையும் பெறுகிறார்கள். வார இறுதி டேட்டா ரோல்ஓவர் என்பது வார நாட்களில் உங்களால் பயன்படுத்த முடியாத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தலாம். இது தவிர, Binge All Night சலுகை என்பது வாடிக்கையாளர்களுக்கு 12AM முதல் 6AM வரை அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது.