Vodafone Idea (Vi) நாட்டின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், அதன் பயனர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது, இருப்பினும், வயர்லெஸ் பிரிவில் இழந்த சந்தைப் பங்கை Vi மீண்டும் பெற முயற்சிப்பதால் விரைவில் நிதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, நீங்கள் Vi யின் ப்ரீபெய்ட் சலுகைகளைப் பார்த்தால், நீங்கள் தேர்வு செய்ய பல சிறந்த விருப்பங்களைக் காணலாம். இங்குள்ள கட்டணங்கள் ஜியோவில் இருந்து வேறுபட்டதாக இருந்தாலும் (மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மாற்று) Vi யின் பல விருப்பங்களுடன் நீங்கள் இன்னும் நல்ல விலையில் பெறலாம் ஒரு வருட வேலிடிட்டியுடன் வரும் இந்த டெலிகாம் நிறுவனத்தின் நல்ல மதிப்புள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பற்றி இன்று பார்க்கலாம்.
நீங்கள் அடிகடி ரீச்சார்ஜ் செய்யும் தொல்லையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் வோடபோன் ஐடியாவின் ரூ,1799 கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம், இது நிறுவனத்தின் பழைய திட்டமாகும் மற்றும் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 24GB யின் டேட்டா வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கும், இதை தவிர இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 3600 SMS நன்மைகள் வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் கூடுதல் நன்மையாக Vi Movies & TV போன்றவையும் 1 ஆண்டு வேலிடிட்டி உடன் வழங்கப்படுகிறது.
இந்த திட்டமானது அதிக டேட்டா பயனர்களுக்காக உருவாக்கப்படாத திட்டமாகும். இது மிகக் குறைந்த டேட்டாவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கானது மற்றும் தகவல்களுக்கு SMS அனுப்புதல் அல்லது டேக்ஸ்டிங் போன்ற அடிப்படை விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களின் சேவை வேலிடிட்டி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் அவர்கள் தங்கள் சிம் கார்டுகளை செயலில் வைத்திருக்க முடியும்.
நீங்கள் டேட்டாவை பயன்படுத்த நினைத்தால் இதனுடன் டேட்டா வவுச்சர் டாப் அப் பிளான் எடுக்கலாம், வெளிப்படையாக, இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் FUP (fair usage policy)டேட்டா வவுச்சர்கள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். 19 ரூபாய் முதல் டெலிகாம் நிறுவனங்களால் வழங்கப்படும் பல டேட்டா வவுச்சர்கள் உள்ளன. இந்தத் திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும், மேலும் Vi இன் அதிகாரப்பூர்வ ஆப் வெப்சைட் அல்லது மூன்றாம் தரப்பு ஆப்கள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.
இதையும் படிங்க: Infinix Note 40 சீரிஸ் ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம்