வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1, 2019 முதல் அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. டெலிகாம் துறையில் அந்நிறுவனம் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக விலை உயர்வு பற்றி முடிவு எட்டப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை உயர்வு பற்றி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சேவை கட்டணம் எத்தனை சதவிகிதம் வரை உயரும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்றும் முயற்சிகளில் இந்நிறுவனம் தொடர்ந்து இந்தியா முழுக்க சீரான மொபைல் சேவையை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
"வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்க, வோடபோன் ஐடியா தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1, 2019 முதல் உயர்த்த இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சேவைகளை துவங்கி 30 கோடி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து முதலீடு செய்வோம்," என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
முன்னதாக வோடபோன் நிறுவனம் இந்திய வியாபாரத்தை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இவ்வாறு வெளியான தகவல்களில் உண்மையில்லை என வோடபோன் கூறியது. மேலும் இந்திய சந்தையை விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்நிறுவனம் அறிவித்தது.
சந்தை இழப்புகள்
சந்தையில் நிலைமை குறித்து பேசுகையில், தொலைத் தொடர்புத் துறையில் பெரிய வீரர்களில் ஒருவரான வோடபோன் ஐடியா, காலாண்டு இழப்பு வரலாற்றில் டாடா மோட்டார்ஸை வீழ்த்தியுள்ளது. சராசரி மொத்த வருவாய் (ஏஜிஆர்) நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சமர்ப்பிக்க வேண்டியிருந்ததால், அது 2019 செப்டம்பர் காலாண்டில் ரூ .50,922 கோடி இழப்பைச் சந்தித்தது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அரசுக்கு ரூ .33,010 கோடியை செலுத்த வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது