Vodafone Idea ரூ,200 கொண்ட அதிரடி சூப்பர் பிளான்

Updated on 15-Jul-2024
HIGHLIGHTS

Vodafone Idea லிமிடெட் (VIL) அதன் திட்டத்தின் விலையை அதிகரித்தது

இந்த திட்டங்களின் விலை ரூ, 198 மற்றும் ரூ, 204 ஆகும்.

டேட்டாவை உங்களுக்கு வழங்காமல் போகலாம். ஆனால் இதிலிருக்கும் நன்மை என்ன என்பதை பார்க்கலாம்

Vodafone Idea லிமிடெட் (VIL) அதன் திட்டத்தின் விலையை அதிகரித்தது, இருப்பினும் நிறுவனம் அதன் வேலிடிட்டி பேக்கில் நிறுவனம் இப்பொழுது குறைந்தபட்சம் ரூ,200 கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டமானது முதலில் இருந்தே இருக்கிறது இந்த திட்டத்தின் விலை அவ்வளவு ஒன்றும் அதிகம் இல்லை . இந்த திட்டங்களின் விலை ரூ, 198 மற்றும் ரூ, 204 ஆகும். குறைந்த விலையில் ஒரு வேலிடிட்டியை விரும்புவோர்களுக்கு இந்த திட்டமும் சிறந்ததாக இருக்கும், இருப்பினும் இந்த இரண்டு திட்டங்களும் முழு வேலிடிட்டியாகும் நெட்டில் ப்ரவுசிங் செய்ய போதுமான டேட்டாவை உங்களுக்கு வழங்காமல் போகலாம். ஆனால் இதிலிருக்கும் நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Vodafone Idea ரூ,198 பிளான்

Vodafone Idea யின் ரூ,198 யில் வரும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் 500MB யின் டேட்டா மற்றும் 30 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது இந்த டாக்டைமுடன் இந்த திட்டம் ரூ,198 யில் வருகிறது. கால்களுக்கு வினாடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படுகிறது, அதாவது ஒவ்வொரு நிமிட காலுக்கு ரூ.1.50 வசூலிக்கப்படும்.

500MB டேட்டா தினசரி அடிப்படையில் கஸ்டமர்களுக்கு வழங்கப்படுவதில்லை, இருப்பினும் இந்த திட்டத்தில் மொத்த டேட்டாவே அவ்வளவு தான் மேலும் இந்த திட்டத்தில் SMS நன்மையும் எதுவும் கிடைக்காது.

Vodafone Idea ரூ,204 பிளான்.

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டமானது ரூ,204 யில் வருகிறது இந்த திட்டம் ரூ,198 திட்டத்தை விட 6 ரூபாய் அதிகமாக இருக்கிறது, இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது இந்த திட்டத்தில் வேலிடிட்டியை தவிர மற்ற அனைத்து நன்மைகளும் அதே தான் இருக்கிறது. ரூ,204 யில் 500MB யின் டேட்டா வழங்கப்படுகிறது, இதில் SMS நன்மை எதுவும் கிடைக்காது.

இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டியாகும் காலம் ஒரு மாதம். அதாவது, இந்த திட்டத்தில் 30 நாட்கள் அல்லது 31 நாட்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் நீங்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: Airtel யின் விலை உயர்வுக்கு பிறகு வந்த 84 நாட்கள் வேலிடிட்டி பிளான்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :