நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனம் #RechargeforGood எனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய தெரியாத அல்லது இணைய வசதி இல்லாத குடும்பத்தார், நண்பர் அல்லது எவருக்கு வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்யலாம்.
கேஷ்பேக் சலுகை மைவோடபோன் செயலி அல்லது மைஐடியா செயலி மூலம் மேற்கொள்ளப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு ரீசார்ஜ் செய்வோருக்கு வோடபோன் ஐடியா சார்பில் ரீசார்ஜ் தொகையில் 6 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள்:
– மைவோடபோன் அல்லது மைஐடியா செயலியில் லாக் இன் செய்து ஏதேனும் தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்
– ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர் கணக்கில் கேஷ்பேக் தொகை கூப்பன் வடிவில் சேர்க்கப்படும்
– இந்த கூப்பன்களை வாடிக்கையாளர் மேற்கொள்ளும் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா அறிவித்து இருக்கும் #RechargeforGood திட்டம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.