இந்தியாவில் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாக Vodafone Idea (Vi) இருக்கிற்றது , இது இப்பொழுது தனது கஸ்டமர்களுக்கு புதிய 169 ரூபாயில் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுடன் கூடுதல் கட்டணமின்றி வருகிறது. இந்தத் திட்டம் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து டேட்டா பிளான்கள் பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது மேலும் உங்களிடம் அடிப்படை செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டம் இருந்தால் மட்டுமே இது செயல்படும். உங்களுக்கு டேட்டா தேவை என்றால் இந்த திட்டம் சிறந்ததாக இருக்காது. இருப்பினும், டேட்டாவுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் நன்மையை நீங்கள் விரும்பினால், இது ஒரு நல்ல சலுகையாக இருக்கும். இந்தத் திட்டத்தின் விவரங்களைப் பார்ப்போம்.
வோடபோன் ஐடியாவின் 169ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் 8GB டேட்டா உடன் வருகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு வருகிறது ஸ்டான்ட் அலோன் வேலிடிட்டி கிடைக்கும் அதாவது, 30 நாட்களுக்குப் பிறகு, உங்கள் அடிப்படைத் திட்டம் செயலில் இருந்தாலும், இந்த டேட்டா வவுச்சர் எக்ஸ்பைர் ஆகிவிடும் பயன்படுத்தப்படாத பலன்களும் எக்ஸ்பைர் ஆகிவிடும் இருப்பினும், திட்டத்துடன் வழங்கப்பட்ட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா முழு மூன்று மாதங்கள் அல்லது 90 நாட்களுக்கு செயலில் இருக்கும்.
நீங்கள் OTT நன்மைகளை விரும்பவில்லை மற்றும் டேட்டாவை மட்டுமே விரும்பினால், நீங்கள் ரூ 98 திட்டத்துடன் செல்ல வேண்டும். இருப்பினும், நிறுவனம் இதுபோன்ற பிற திட்டங்களைக் கொண்டுள்ளது, ஆனால் இந்தத் திட்டத்தைப் பற்றி நாங்கள் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்தத் திட்டம் 9 ஜிபி டேட்டாவை வழங்குகிறது (இது ரூ. 169 திட்டத்தில் நீங்கள் பெறும் டேட்டாவுக்கு கிட்டத்தட்ட சமம்). ரூ.98 திட்டத்தின் சேவை வேலிடிட்டியாகும் காலம் 21 நாட்கள் ஆகும்
இதை தவிர நீங்கள் 75ரூபாய் கொண்ட திட்டத்தையும் எடுக்கலாம் இதன் வெளிட்ட்டி 7 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதில் 6GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது தற்போது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது. Vi இன் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால், ரூ.75 திட்டத்தில் 1.5ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கும். Vi ஆப் iOS மற்றும் Android சாதனங்களில் கிடைக்கிறது.
இதையும் படிங்க: Jio IPL 2024:இரண்டு கிரிகெட் பிரியர்களுக்கு அட்டகாசமான பிளான்