வோடபோன் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் ஆல்-ரவுன்டர் ரீசார்ஜ் சலுகையை வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
டாக்டைம் மற்றும் டேட்டா உள்ளிட்டவை வழங்கும் இந்த புதிய சலுகைகளின் துவக்க விலை ரூ.25 ஆகும். குறைந்த விலையில் கிடைப்பதோடு பயனர்களுக்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை பெற முடியும் என வோடபோன் ஐடியா லிமிட்டெட் அறிவித்துள்ளது.
ரூ.25 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.245 விலை வரை கிடைக்கும் சலுகைகளின் வேலிடிட்டி 28 நாட்களில் இருந்து 84 நாட்கள் வரை வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக புதிய சலுகைகள் சென்னை மற்றும் தமிழ் நாடு வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.