Vodafone Idea வெறும் 19ரூபாயில் 1 நாள் முழுவதும் டேட்டா பயன்படுத்தலாம்

Updated on 11-Apr-2024
HIGHLIGHTS

Vodafone Idea (Vi),இந்தியாவின் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாகும்

இது அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது,

இந்த திட்டத்தின் விலை ரூ,19 ஆகும் இது ஒரு டேட்டா வவுச்சர் மற்றும் இது ஷோர்ட் டர்ம் திட்டமாகும்

Vodafone Idea (Vi),இந்தியாவின் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை ரூ,19 ஆகும் இது ஒரு டேட்டா வவுச்சர் மற்றும் இது ஷோர்ட் டர்ம் திட்டமாகும், மூவீ பார்க்க விரும்புவர்களுக்கு இந்த திட்டம் சரியானதாகும் ஷோர்ட் term டேட்டா தேவைகளுக்காக டேட்டா வவுச்சர் மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்பும் போது அவர்களின் விருப்பங்களில். டேட்டா வவுச்சர் மூலம் ரீசார்ஜ் செய்ய, கஸ்டமர்களுக்கு பேசிக் செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டம் தேவை. வோடபோன் ஐடியாவின் (Vi) ரூ.19 திட்டத்தில் வழங்கப்படும் நன்மைகளைப் பார்க்கலாம்.

Vodafone Idea Rs 19 Plan

வோடபோன் ஐடியாவின் ரூ,19 திட்டம் 1GB டேட்டா உடன் வருகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாட்களுக்கு இருக்கிறது அதாவது இந்த திட்டமானது அதே நாளில் முடிவடையும் அதாவது 11:59 pmக்குள் இருக்கும் அதனால் தான் இது 1 நாள் மட்டுமே வேலிடிட்டி இருக்கும் என குறிப்பிடப்பட்டது இந்த திட்டமானது உடனடியாக 1GB டேட்டா விரும்புவோர்களுக்கு இது பொருந்தும்.

சமிபத்தில் வோடபோன் ஐடியா அதன் புதிய ரூ,49 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது இது கூட ஒரு டேட்டா வவுச்சர் தான் மற்றும் இது 1 நாள் வேலிடிட்டியை தரும் சரி இதை பற்றி முழுமையாக பார்க்கலாம் வாங்க.

Vodafone Idea Rs 49 Plan

வோடபோன் ஐடியாவின் ரூ,49 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இதில் 20GB யின் டேட்டா வழங்கப்படுகிறது குறைந்த விலையில் அதிகபட்சமான டேட்டா கிடைக்கும் , இந்த திட்டத்திற்கு கஸ்டமர்கள் ஒரு பேசிக் செயலில் உள்ள திட்டத்தையும் வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு 49ரூபாய் கொண்ட ரீச்சார்ஜ் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால், அதே நாளில் முடித்துவிட வேண்டும் அதாவது 11:59 மணிக்குள் இந்த திட்டம் எக்ஸ்பைர் ஆகிவிடும்.

இந்த ரூ.49 திட்டமானது ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் சலுகைகளைப் போலவே உள்ளது. ரூ 19 திட்டம் கூட ஜியோ வழங்கும் திட்டத்தைப் போலவே உள்ளது, இது தவிர Vi யின் திட்டம் ஒரு நாள் வேலிடிட்டியாகும்

இதையும் படிங்க:Xiaomi யின் இந்த போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :