Vodafone Idea இந்த குறைந்த விலையில் கிடைக்கும் பல நன்மை
Vodafone Idea (Vi), இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டர், ஆகும்.
ஜியோவின் மிகவும் குறைந்த விலை திட்டமானது ரூ.149 ஆகும், அதே சமயம் ஏர்டெல்லின் மிகவும் குறைந்த விலை ரீசார்ஜ் ரூ.155 ஆகும்.
Vi யின் மிகவும் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டமானது வெறும் ரூ.99 ஆகும்.
Vodafone Idea (Vi), இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டர், தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ஜியோவின் மிகவும் குறைந்த விலை திட்டமானது ரூ.149 ஆகும், அதே சமயம் ஏர்டெல்லின் மிகவும் மலிவு விலை ரீசார்ஜ் ரூ.155 ஆகும்.
இதற்கிடையில், Vi யின் மிகவும் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டமானது வெறும் ரூ.99 ஆகும். இருப்பினும், இவ்வளவு குறைந்த விலை காரணமாக, இந்த திட்டத்தின் நன்மைகளை நிறுவனம் குறைத்துள்ளது. எனவே மறைமுகமாக திட்டத்தின் பலன்களை குறைத்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 2024 இல் Vi யின் மிகவும் குறைந் விலை ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.
Vodafone Idea ரூ,99 யில் கிடைக்கும் நன்மைகள்
சில டெலிகாம் வட்டங்களில் நிறுவனம் இந்த திட்டத்தை முற்றிலுமாக நீக்கியுள்ளது. மேலும், ஹரியானா போன்ற சில வட்டங்களில், ரூ.99 திட்டத்தின் வேலிடிட்டி 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மும்பை போன்ற வேறு சில பகுதிகளில் 15 நாட்களாகும்.
நீங்கள் வசிக்கும் வட்டத்தைப் பொறுத்து, ரீசார்ஜ் செய்ய ரூ.99 திட்டத்தைப் வழங்குகிறது இல்லையா. கூடுதலாக, அதன் சேவை செல்லுபடியாகும் மற்ற வட்டங்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்டிருக்கலாம், எனவே ரீசார்ஜ் செய்யும் போது இதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தின் டேட்டா நன்மைகள் அப்படியே இருக்கும். 7 நாட்கள் அல்லது 15 நாட்கள் கிடைக்குமா, அதனுடன் வரும் டேட்டா 200MB மட்டுமே இருக்கும். ஆனால் 7 நாட்கள் வேலிடிட்டி இருக்கும் இடத்தில் டாக் டைம் ரூ.30 ஆகவும், 15 நாட்கள் வேலிடிட்டி இருக்கும் இடத்தில் ரூ.99 டாக்டைம் ஆகும். முன்னதாக இந்த திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வந்தது.
இதையும் படிங்க: itel A70 ஸ்மார்ட்போன் அறிமுகம், இதன் டாப் அம்சம் தெருஞ்சிகொங்க
இந்த திட்டத்தில், கால்களுக்கு வினாடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படுகிறது. திட்டத்துடன் அவுட்கோயிங் SMS கிடைக்காவிட்டாலும், ஸ்டேட்டண்டர்ட் SMS கட்டணத்தில் போர்ட் கோரிக்கைக்கு பயனர்கள் எப்போதும் 1900 க்கு SMSஅனுப்பலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile