ஜியோ வந்ததில் பல டெலிகாம் நிறுவங்களும் தாக்கு பிடிக்காமல் போனதே இந்த ஐடியா வோடாபோனுக்கு கூட்டுக்கு காரணம் இந்த ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா நிறுவனங்களின் கூட்டு இன்று நிறைவு பெற்றது. இதன் மூலம் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் மிக பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் பின்னுக்கு தள்ளும்.
இந்த ஒன்றிணைப்பில் புதிய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுக்கு சம அளவு போட்டியளிக்கும் நிறுவனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவு பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைய முடிவு செய்தன.
அதன்படி பிப்ரவரி மாதத்தில் இருநிறுவனங்களும் இதற்கான பணிகளை துவங்கின. இந்தியாவில் இவ்விரு நிறுவனங்கள் இணைப்பு மதிப்பு 2300 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.6 லட்சம் கோடி) என கணக்கிடப்பட்டது.
ஒன்றிணைந்திருக்கும் புதிய நிறுவனம் டெலிகாம் சந்தையின் வருவாயில் 40% பங்குகளை கொண்டிருக்கும் என் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 40 கோடியை எட்டியுள்ளது. புதிய நிறுவனத்தின் நிர்வாக தலைவராக குமார் மங்கலம் பிர்லாவும் புதிய தலைமை செயல் அதிகாரியாக பலேஷ் ஷர்மா செயல்படுகின்றனர்.