ரூ .109 மற்றும் ரூ .169 யில் வோடபோன்-ஐடியாவின் புதிய ப்ரீபெய்ட் திட்டம்.

Updated on 06-Sep-2020
HIGHLIGHTS

வோடபோன்-ஐடியா இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

Vodafone யின் 169 ரூபாய் கொண்ட திட்டம்.

ரூ .109 மற்றும் ரூ .169 திட்டத்துடன் வந்துள்ளது, மேலும் 20 நாட்கள் வேலிடிட்டியாகும்

மூத்த தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன்-ஐடியா இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை சிறிய வேலிடிட்டி மற்றும் குறைந்த விலையில் உள்ளன. இந்நிறுவனம் ரூ .109 மற்றும் ரூ .169 திட்டத்துடன் வந்துள்ளது, மேலும் 20 நாட்கள் வேலிடிட்டியாகும் . திட்டத்தில், டேட்டா மற்றும் காலிங்குடன் பிற அம்சங்களையும் வழங்குகிறது . எனவே இந்த திட்டங்களின் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வோம்

Vodafone யின் 169 ரூபாய் கொண்ட  திட்டம்.

இந்தத் திட்டம் பெரும்பாலும் 109 ரூபாயைப் போன்றது, இருப்பினும் அதிகமான டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வழங்கப்பட்டுள்ளன. இதில், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டட் காலிங் வசதியைப் வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இது தவிர, வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 பயன்பாடுகளின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள்.ஆகும்.

எந்த பயனர்கள் பயனடைகிறார்கள்

இந்த திட்டங்கள் டெல்லி பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது இது தவிர, டெல்லி வட்டத்திற்கு ரூ .46 மதிப்புள்ள திட்ட வவுச்சரையும் நிறுவனம் தொடங்கியுள்ளது. முன்னதாக இந்த வவுச்சர் கேரள வட்டத்திற்கு மட்டுமே இருந்தது. புதிய திட்டங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :