Vodafone Idea சமிபத்தில் அதன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டமான ரூ,19 மற்றும் ரூ,49 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இப்பொழுது VI 125ரூபாய் மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை சத்தமில்லாமல் கொண்டுவந்துள்ளது, இது ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும்
இந்தத் திட்டங்கள் டெலிகாம் நிறுவனம் ஒரு பயனருக்கான சராசரி வருவாயையும் (ARPU) ஒட்டுமொத்த வருவாயையும் அதிகரிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, Vi இன் ப்ரீபெய்ட் பேக்குகள் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன, மேலும் Vi இன் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது iOS மற்றும் Android பயனர்களுக்குக் கிடைக்கும் அதன் மொபைல் ஆப்யின் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.
வோடபோன் ஐடியாவின் 125ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இது 28 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டி வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் கஸ்டமர்களுக்கு 1GB டேட்டா வழங்கப்படுகிறது இது ஒரு டேட்டா ஆட்-ஆன் பேக் என்பதால், கஸ்டமர்கள் அதைப் பயன்படுத்த செயலில் பேசிக் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருக்க வேண்டும். அதாவது இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு வழங்கும் மொத்த டேட்டா 28ஜிபி ஆகும்.
Vi பயனர்கள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பல டேட்டா வவுச்சர்கள் உள்ளன. சில திட்டங்கள் OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் வருகிறது சில திட்டங்கள் டேட்டாக்கள் மட்டுமே வருகின்றன. சில திட்டங்கள் மொத்த டேட்டாவை வழங்குகின்றன, சில தினசரி டேட்டாவை வழங்குகின்றன. இரவு நேரத்தில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் திட்டங்களும் உள்ளன. எல்லோருக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று சொல்வதில் தவறில்லை.
அந்த வகையில் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரூ 19 கொண்ட திட்டத்தின் வேலிடிட்டி 1 நாட்களுக்கு மட்டுமே இருக்கும் , அதாவது இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதே நாளில் முடிவடையும் அதகது 11:59 PM முடிந்து விடும் இதன் அடித்த ரூ,49 விலையில் வரும் திட்டம் 20GB யின் டேட்டா நன்மை மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாட்களுக்கு மட்டுமே இருக்கும் அதாவது இந்த திட்டத்தின் 11:59 PM இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடிவடைந்துவிடும்
இதையும் படிங்க WhatsApp மற்றும் Instagram யில் AI சேட்டிங் அம்சம் எப்படி பயன்படுத்துவது ?