வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டியை பற்றி பேசினால் அதிகபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றனஅதாவது இந்த சலுகையில் அதிரடி மாற்றத்தால் இப்பொழுது கிடைக்கும் இரட்டிப்பு டேட்டா.
மேலும் இவற்றில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டன. தற்சமயம் கூடுதலாக 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடிகளை செலுத்துவதில் வோடபோன் ஐடியா கடும் நெருக்கடி சூழலை சந்தித்து வரும் நிலையில், வோடபோன் ஐடியா புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இத்துடன் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சந்தாவும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஐடியா மூவிஸ் மற்றும் டி.வி. செயலியை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
புதிய இருமடங்கு டேட்டா குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும் சரியான வேலிடிட்டி பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
வோடபோன் ஐடியா வலைதளங்களில் உள்ள விவரங்களின் படி, கூடுதல் டேட்டா தினமும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ரூ. 249 பிரீபெயிட் சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போன்று ரூ. 399 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, 56 நாட்களுக்கும், ரூ. 599 சலுகையில் 3 ஜி.பி. டேட்டா 84 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது.