Vodafone Idea வெறும் ரூ,23 புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் பல நன்மை
. Vi தனது புதிய திட்டங்களில் ஒன்றாக ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் ஆகும்,
இந்த புதிய Vi பிளான் ரூ.23 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Vodafone Idea (Vi) நாட்டின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாகும். Vi தனது புதிய திட்டங்களில் ஒன்றாக ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவலுக்கு, இந்தத் திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் ஆகும், அதாவது எந்த அடிப்படைத் திட்டமும் இல்லாமல் வேலை செய்யாது. இந்த புதிய Vi பிளான் ரூ.23 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதிலிருக்கும்நன்மை என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
Vodafone Idea ரூ,23 ப்ரீபெய்ட் பிளான்
நிறுவனத்தின் ரூ.23 திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் என்று நாங்கள் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளோம். இந்த டேட்டா திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 1.2ஜிபி டேட்டாவைப் வழங்கபடுகிறது, இருப்பினும், இந்தத் டேட்டா 1 நாள் வேலிடிட்டியாகும் நிறுவனத்திடம் ரூ.19 திட்டமும் உள்ளது என்பதை உங்களுக்கு நினைவுட்டுகிறோம் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 1 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது இது 1 நாளுக்கு மட்டுமே வேலிடிட்டியாகும்.
இப்போது உங்களுக்கு 1ஜிபி டேட்டாவுக்கு மேல் தேவை என்றால் ரூ.23 விலையில் Vi பிளான் வாங்கலாம், இருப்பினும் 1ஜிபி டேட்டா மட்டுமே தேவை என்றால் ரூ.19 விலையுள்ள திட்டத்தை வாங்கலாம். ரூ.19 திட்டத்தைப் போலல்லாமல், ரூ.23 திட்டத்தில் 200எம்பி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : Whatsapp யின் புதிய View-Once அம்சம் இதனால் என்ன பயன்
தகவலுக்கு, இந்தத் திட்டத்தில் கிடைக்கும் டேட்டா நள்ளிரவு 12 மணிக்கு முடிவடையும் . இதன் பொருள், திட்டத்தில் உங்களிடம் டேட்டா இருந்தால், ஆனால் நேரம் முடிந்துவிட்டால், உங்கள் டேட்டா இழக்கப்படும். அதாவது எக்ஸ்பைர் ஆகிவிடும்
அதாவது நீங்கள் அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. நிறுவனம் ரூ.24 திட்டத்தையும் கொண்டுள்ளது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். இருப்பினும், நீங்கள் இதை 1 மணிநேரத்திற்கு மட்டுமே பெறலாம் இந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இருப்பினும், உங்களுக்கு 3 ஜிபி முதல் 4 ஜிபி வரை டேட்டா தேவைப்பட்டால், நீங்கள் வேறு சில ரீசார்ஜ் திட்டங்களையும் வாங்கலாம். அவர்களின் தகவலுக்கு நீங்கள் Vi யின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடலாம். இங்கே நீங்கள் திட்டங்களின் அனைத்து விவரங்களையும் மிக எளிதாகப் பெறலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile