மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட ஜியோ: அசத்தும் வோடபோன்

Updated on 06-Feb-2018
HIGHLIGHTS

அப்லோடு வேகத்தை பொருத்த வரை வோடபோன் நிறுவனம் ஐடியாவை பின்னுக்கு தள்ளி நொடிக்கு 6.9 MB வேகத்தை பதிவு செய்திருக்கிறது

மை ஸ்பீடு என்னும் ப்ரோசெசரில்  இண்டர்நெட் வழங்கும் அனைத்து டெக்நோலோஜி நிறுவனங்களின் அப்லோட் மற்றும் டவுன்லோட் வேகத்தை கணக்கிட்டு வெளியிடுகின்றன. அந்த வகையில் நவம்பர் மாத லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

அப்லோடு வேகத்தை பொருத்த வரை வோடபோன் நிறுவனம் ஐடியாவை பின்னுக்கு தள்ளி நொடிக்கு 6.9 MB வேகத்தை பதிவு செய்திருக்கிறது. ஐடியா நொடிக்கு 6.6 எம்பி வேகமும், ஜியோ நொடிக்கு 4.9 MB மற்றும் ஏர்டெல் நொடிக்கு 4.0 MB வழங்கியுள்ளன.

கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி ஐடியா நொடிக்கு 7.1 MB வழங்கி்யது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் முதலிடத்தை பிடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது.

ஆனால், டவுன்லோடு வேகத்தை பொருத்த வரை ஜியோ 11-வது மாதமும் தொடர்ச்சியாக முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் வோடபோன் உள்ளது. மூன்றாம் இடத்தில் ஏர்டெல் அதன் பின்னர் ஐடியா உள்ளது.

இந்த செய்திகள் அனைத்தையும் சேகரித்து மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :