VI யின் 5G திட்டம் ரூ,299 யில் அறிமுகம் இனி ஜாலியா அன்லிமிடெட் 5G நன்மை பெற முடியும் ஆனால் இவர்களுக்கு மட்டும் தான்

VI யின் 5G திட்டம் ரூ,299 யில் அறிமுகம் இனி ஜாலியா அன்லிமிடெட் 5G நன்மை பெற முடியும் ஆனால் இவர்களுக்கு மட்டும் தான்
HIGHLIGHTS

Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் 5G ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இதன் விலை ரூ,299 யில் வருகிறது இதன் மூலம் நீங்கள் 5G போன இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்தலாம்

Vi யின் 5G சேவை மும்பை பயனர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்

Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் 5G ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இதன் விலை ரூ,299 யில் வருகிறது இதன் மூலம் நீங்கள் 5G போன் வைத்திருந்தால் இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த திட்டமானது தினமு 5G டேட்டா,அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS நன்மைகள் வழங்கப்படுகிறது, இருப்பினும் இதில் ஒரு ட்விஸ்ட் , Vi யின் 5G சேவை மும்பை பயனர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Vi ரூ,299 திட்டம்

VI யின் இந்த புதிய திட்டம் ரூ,299 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் 1GB டேட்டா உடன் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் பெறலாம் இதுமட்டுமில்லாமல் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டியை பற்றி பேசுகையில் இது 28 நாட்களுக்கு வருகிறது மேலும் இதன் டேட்டா லிமிட் குறையும்போது 64Kbpsஆக ஸ்பீட் குறையும்

Vi யின் இந்த 5G திட்டம் எங்கு யாருக்கு கிடைக்கும் ?

தற்போது, ​​Vi 5G மும்பையில் கிடைக்கிறது. இந்தியா முழுவதும் படிப்படியாக இந்த சேவையை அறிமுகப்படுத்தப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், Vi, அதன் பிரத்யேக ‘5G’ வலைத்தளத்தில், அதன் 5G நெட்வொர்க் விரிவடைந்து வருவதாகக் கூறுகிறது. இதை எழுதும் வரை, பீகார், டெல்லி, கர்நாடகா, மும்பை மற்றும் பஞ்சாப் வட்டங்கள் கீழ்தோன்றும் மெனுவில் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், 5G தற்போது மும்பை வட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது. மீதமுள்ள வட்டங்களுக்கு, Vi கூறுகிறது, “காத்திருப்பு முடிந்துவிட்டது. ஏப்ரல் 2025 இல் ஜெட்-ஸ்பீடு நெட்வொர்க் ஏற்றப்படுகிறது.” இதன் பொருள் மீதமுள்ள வட்டங்களில் உள்ள கஸ்டமர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் 5G தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையை யார் பயன்படுத்த முடியும்?

இந்தத் திட்டத்தின் ஒரு முக்கிய விவரம் என்னவென்றால், அன்லிமிடெட் 5G டேட்டா 5G ஸ்மார்ட்போன்களிலும் மும்பையின் 5G நெட்வொர்க் கவரேஜ் பகுதிக்குள் மட்டுமே பொருந்தும். நீங்கள் 5G மண்டலத்திற்கு வெளியே இருந்தால், Vi இன் தற்போதைய 4G நெட்வொர்க்கை நீங்கள் நம்பியிருக்க வேண்டும்.

Vi யின் திட்டத்தில் ரூ,299 ப்ரீபெய்ட் திட்டத்தை தவிர நீங்கள் போஸ்ட்பெய்ட் கச்டமராக இருந்தால் ரூ,451 மற்றும் அதற்க்கும் அதிகமான திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் 5G நன்மை பெற முடியும் ஆனால் Vi 5G நன்மை மும்பை கஸ்டமருக்கு மட்டுமே கிடைக்கும்.

இதையும் படிங்க io ரூ,200க்குள் அதிக வேலிடிட்டியுடன் வரும் சூப்பர் மஜாகோ திட்டம் காலிங் மற்றும் டேட்டா போன்ற பல நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo