டெலிகாம் நிறுவங்கள் அதன் ரீச்சார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது, அந்த வகையில் jio மற்றும் airtel அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் திட்டத்தின் விலையை ஜூலை 3 முதல் உயர்த்தியது, இருப்பினும் நீங்கள் VI (Vodafone-idea) கஸ்டமாரக இருந்தால் இன்று முதல் அதாவது ஜூலை 4 முதல் அதன் விலை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் இன்று முதல் அதன் புதிய விலை என்ன என்பதை பார்க்கலாம்.
நிறுவனம் மொத்தமாக 13க்கும் அதிகமான திட்டத்தை அதிகரிக்க உள்ளது, இவற்றில் 19 ரூபாயாக இருந்த மலிவான கட்டணமானது இனி 22 ரூபாயாக இருக்கும். இது டேட்டா ஆட் ஆன் பிளான் மற்றும் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதேபோல், 2899 ரூபாயாக இருந்த மிகவும் விலையுயர்ந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் இப்போது 3599 ரூபாயாக இருக்கும்.
Vi திருத்திய 13 ரீசார்ஜ் திட்டங்களில், 28 நாட்கள் வேலிடிட்டியாகும் குறைந்த விலை ரீசார்ஜ் இப்போது ரூ.199 ஆகும். முன்னதாக இதன் விலை ரூ.179 ஆக இருந்தது. இதேபோல், ரூ.269 திட்டம் இப்போது ரூ.299 ஆக இருக்கும். 299 ரூபாய்க்கு 28 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய, நீங்கள் 349 ரூபாய் செலுத்த வேண்டும்.
56 நாட்களுக்கு ரூ.329 ஆக இருந்த குறைந்த விலை திட்டம் இப்போது ரூ.369 ஆக இருக்கும். 479 ரூபாய்க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் இப்போது ரூ.579 ஆக இருக்கும். ரூ.539 திட்டத்திற்கு ரூ.649 செலுத்த வேண்டும்.
84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்றேபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தின் விலை 459 விலை இருந்தது, ஆனால் இனி அதன் விலை 509 ரூபாயாக இருக்கும், ரூ.719 திட்டத்திற்கு ரூ.859 செலுத்த வேண்டும். மிகவும் விலையுயர்ந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ரூ.839 84 நாட்களுக்கு இப்போது ரூ.979 ஆக இருக்கும். நிறுவனம் 180 நாட்கள் வேலிடிட்டியுடன் ரீசார்ஜ் செய்கிறது. இதன் விலை ரூ.1449, ஆனால் நாளை முதல் இதன் விலை ரூ.1749 ஆக இருக்கும். 365 நாள் ரீசார்ஜ் திட்டங்களின் விலை சுமார் ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. ரூ.2899க்கு ரீசார்ஜ் செய்ய, நாளை முதல் ரூ.3499 செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க:Airtel மற்றும் Jio திட்டத்தின் விலை இன்று முதல் உயர்வு புதிய விலை என்ன