Vi Annual Plan: Vi யின் இந்த வருடாந்திர திட்டத்தில் கிடைக்கும் OTT உட்பட பல நன்மை
Vi, புதிய வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கை ரூ.3199 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது
வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டத்துடன் Amazon Prime வீடியோ சப்ச்க்ரிப்ஸன் கொண்டு வந்துள்ளது
ரூ.3199 என்ற குறைந்த கட்டண பிரிவில் வருடாந்திர திட்டத்தில் அதிக நன்மைகளை வழங்கும்
இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை வழங்குநரான Vi, புதிய வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கை ரூ.3199 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதன்முறையாக, இந்த நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டத்துடன் Amazon Prime வீடியோ சப்ச்க்ரிப்ஸன் கொண்டு வந்துள்ளது.
இந்த நீண்ட கால திட்டம் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் பயனர்களுக்கு தனித்துவமான கனெக்சன் மற்றும் என்டர்டைமேன்ட்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.3199 என்ற குறைந்த கட்டண பிரிவில் வருடாந்திர திட்டத்தில் அதிக நன்மைகளை வழங்கும் ஒரே டெலிகாம் பிளேயர் நிறுவனம் ஆகும்.
Vi 3199 Plan Details
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, வோடபோன் ஐடியாவின் இந்த திட்டம் சந்தாதாரர்களுக்கு அன்லிமிடெட் கால்கள் 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான ஒரு வருட சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் சிறப்பு OTT நன்மையானது, ப்ரீபெய்டு பயனர்கள் சமீபத்திய திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் அமேசான் ஒரிஜினல்கள் போன்ற ஏராளமான என்டர்டைமென்ட் உள்ளடக்கங்களை இப்போது தொடர்ந்து அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.
இந்த ரீசார்ஜ் பேக்கில் நேஷனல் கால்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வார இறுதி டேட்டா ரோல்ஓவர் மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச பிங்க் போன்ற கூடுதல் நன்மைகளும் அடங்கும். Vodafone Idea பயனர்கள் புதிய ரூ.3199 திட்டத்தை Vi App/இணையதளம் அல்லது அருகிலுள்ள Vi store யில் வாங்கலாம்.
இந்த வெளியீடு வோடஃபோனின் தற்போதைய OTT போர்ட்ஃபோலியோவை மேலும் பலப்படுத்துகிறது:
இதையும் படிங்க: Jio வின் New Year Gift நிறுவனம் இந்த ரீச்சர்ஜில் 24 Extra Validity வழங்குகிறது
Jio-Airtel திட்டத்துக்கே கடும் சவாலை தருகிறது Vodafone Idea யின் வருடாந்திர திட்டம்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ப்ரீபெய்ட் திட்டம், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவற்றின் ஹை எண்டு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களுடன் போட்டியிடுகிறது, அவை முறையே ரூ.4,498 மற்றும் ரூ.3,359 விலையில் உள்ளன. இந்த புதிய பேக் மூலம், வாடிக்கையாளர்கள் தடையற்ற இணைப்பு மற்றும் பொழுதுபோக்குகளை நாள் ஒன்றுக்கு ரூபாய் 9க்கும் குறைவாக அனுபவிக்க முடியும் என்று Vi கூறுகிறார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile