Vodafone Idea (VI) தனது பயனர்களுக்கு புதிய பரிசை வழங்கியுள்ளது.
இப்போது புது டெல்லியில் உள்ள நிறுவனத்தின் ப்ரீபெய்டு பயனர்களும் eSIM ஐப் பயன்படுத்த முடியும்.
eSIM டிஜிட்டல் சிம் கார்ட் என்று என்று அழைக்கலாம்,
Vodafone Idea ( vi) தனது பயனர்களுக்கு புதிய பரிசை வழங்கியுள்ளது. இப்போது புது டெல்லியில் உள்ள நிறுவனத்தின் ப்ரீபெய்டு பயனர்களும் eSIM ஐப் பயன்படுத்த முடியும். உங்களிடம் பிசிக்கல் சிம் இருந்தால், அதை eSIM ஆக மாற்ற விரும்பினால், நீங்கள் கடைக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த விருப்பம் ஏற்கனவே மும்பை மற்றும் கோவாவில் உள்ளது. தற்போது அதில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
eSIM என்றால் என்ன?
eSIM டிஜிட்டல் சிம் கார்ட் என்று என்று அழைக்கலாம், இது உங்கள் மொபைலில் செயல்படுத்தப்பட்டுள்ளது, eSIM க்குப் பிறகு உங்களுக்கு பிசிக்கல் சிம் கார்டு தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் அதைச் செயல்படுத்தலாம். ஸ்மார்ட்போனின் செட்டிங்களுக்கு செல்வதன் மூலமும் இதை செயல்படுத்தலாம் அல்லது எளிய கோடை ஸ்கேன் செய்வதன் மூலமும் ஸ்கேன் செய்யலாம். நீங்கள் வெவ்வேறு நெட்வொர்க் திட்டங்களுக்கு இடையில் மாறலாம் மற்றும் பல ப்ரோபைல் ஒரே இடத்தில் சேமிக்கலாம்.
சுற்றுச்சூழலுக்கும் இது ஒரு நல்ல வழி என்பதை நிரூபிக்கிறது, ஏனெனில் இது பிளாஸ்டிக் வேஸ்ட்டை குறைக்க உதவுகிறது. வழக்கமான சிம் கார்டுடன் ஒப்பிடும்போது, அதில் பல வசதிகள் கிடைக்கும். eSIM இன் சிறப்பு என்னவென்றால், போன் தொலைந்துவிட்டால், அதை எளிதாகத் தடுக்கலாம்.
Vi யின் இந்த eSIM எப்படி பெறுவது ?
உங்கள் மொபைலில் Vi இன் eSIMஐப் பயன்படுத்த விரும்பினால், eSIMஐப் பெறுவதற்கு முதல் சில படிகளைப் பின்பற்ற வேண்டும். இதைச் செய்ய, முதலில் உங்கள் போனில் மெசேஜ் புக்கிற்கு செல்லவும்.
இங்கு வந்த பிறகு, நீங்கள் eSIM எழுதி உங்கள் ஈமெயில் ஐடியைத் தொடர்ந்து ஒரு இடைவெளியை எழுதி 199 க்கு அனுப்ப வேண்டும்.
இப்பொழுது உங்களின் ஈமெயில் id சரியானதாக இருந்தால், உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும்
இந்தச் மெசேஜை பெற்ற பிறகு, eSIM ரெகுவஸ்ட் உறுதிப்படுத்த 15 நிமிடங்களுக்குள் இந்தச் மெசேஜுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். பதிலில் ESIMY என்று எழுத வேண்டும்.
இப்போது காலின் போது இதை உறுதிப்படுத்தும்படி கேட்கும் மெசேஜை பெறுவீர்கள்.
காலில் நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதைச் செய்த பிறகு, உங்கள் ஈமெயில் ஐடியில் ஒரு QR கோட் வரும்.
இப்போது நீங்கள் உங்கள் போனின் செட்டிங்களுக்கு செல்ல வேண்டும், இங்கே நீங்கள் மொபைல் டேட்டாவுக்குச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் Add Plan என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகு நீங்கள் இந்த QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். இங்கே, உங்களுக்குத் தேவைப்பட்டால், இந்தத் திட்டத்தையும் Rename செய்யலாம் இப்போது Continue என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் தொடரவும்.
இப்போது நீங்கள் defaulட் லைன் தேர்ந்தெடுக்க வேண்டும், இங்கே நீங்கள் ப்ரைமரி அல்லது செகண்டரி நிலை தேர்வு செய்யலாம், இப்போது முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்த செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் eSIM சுமார் 30 நிமிடங்களில் செயல்படுத்தப்படும்.
இந்த eSIM எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு சப்போர்ட் செய்யும்.
Vi eSIM ஐ செயல்படுத்துவதற்கு முன், நீங்கள் சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். Apple iPhone XR, Samsung Galaxy Z Flip, Galaxy Fold, Galaxy Note 20 Ultra, Galaxy Note 20, Galaxy Z Fold 2, Galaxy S21 ஆகியவற்றில் எந்த இடையூறும் இல்லாமல் eSIM ஐப் பயன்படுத்தலாம்.
Vi eSIM செயல்படுத்த, உங்கள் ஈமெயில் ஐடி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும். உங்களிடம் அது இல்லையென்றால், உங்கள் மின்னஞ்சல் ஐடியையும் 199 க்கு அனுப்பலாம். மெசேஜ் அனுப்பிய 48 மணிநேரத்திற்குப் பிறகு நீங்கள் மேலும் விஷயங்களைப் பின்தொடரலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.